சட்டப்பேரவை சிறப்பு கூட்டத்தொடர் - மீண்டும் தாக்கல் செய்யப்பட்ட சட்ட மசோதாக்கள் லிஸ்ட் இதோ..

Tamil nadu DMK Governor of Tamil Nadu
By Sumathi Nov 18, 2023 06:49 AM GMT
Report

ஆளுநர் திருப்பி அனுப்பிய 10 மசோதாக்கள் மீண்டும் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

சட்டப்பேரவை

10 மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிப்பதை நிறுத்தி வைப்பதாக குறிப்பிட்டு ஆளுநர் கடந்த 13ஆம் தேதி அதை தமிழ்நாடு அரசுக்கு திருப்பி அனுப்பினார்.

mk stalin

இந்த மசோதாக்களை மீண்டும் நிறைவேற்றுவதற்காக தமிழ்நாடு சட்டப்பேரவையின் சிறப்பு கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டதையடுத்து, சிறப்பு கூட்டத்தொடர் தொடங்கி நடைபெற்று வருகிறது.

ஆளுநர்கள் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சியாளர்கள் அல்ல - விளாசிய நீதிபதி!

ஆளுநர்கள் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சியாளர்கள் அல்ல - விளாசிய நீதிபதி!

மசோதாக்கள் 

தொடர்ந்து, ஆளுநர் திருப்பி அனுப்பிய 10 மசோதாக்கள் மீண்டும் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. அதன் விவரம்: 2020 தமிழ்நாடு மீன்வள பல்கலைக்கழக திருத்த சட்ட மசோதா, 2020 தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலை திருத்த சட்ட மசோதா, தமிழ்நாடு பல்கலைக்கழங்கள் சட்டங்கள் திருத்த மசோதா, தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கார் பல்கலைக்கழக திருத்த மசோதா,

tamil-nadu-legislative-assembly

தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர் மருத்துவ பல்கலைக்கழக சட்ட திருத்த மசோதா, தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக திருத்த சட்ட மசோதா, தமிழ் பல்கலைக்கழகங்கள் திருத்த சட்ட மசோதா, 2023 தமிழ்நாடு மீன்வள பல்கலைக்கழக திருத்த சட்ட மசோதா, தமிழ்நாடு பல்கலைக்கழகங்கள் சட்டங்கள் இரண்டாம் திருத்த மசோதா,

தமிழ் பல்கலைக்கழகங்கள் திருத்த மசோதா, 2023 மீன்வள பல்கலைக்கழக சட்ட திருத்த மசோதா, 2023 கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலை. திருத்த சட்ட மசோதா