1 வாரத்தில் அறிக்கை..தேவைப்பட்டால் நயன் - விக்கி தம்பதியிடம் விசாரணை - அமைச்சர் தகவல்

Nayanthara Ma. Subramanian Vignesh Shivan
By Sumathi Oct 14, 2022 08:02 AM GMT
Report

ஒரு வாரத்தில் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டிருப்பதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

வாடகைத்தாய்

நடிகை நயன்தாரா மற்றும் இயக்குநர் விக்னேஷ் சிவன் ஆகியோர் கடந்த ஜூன் மாதம் 9ம் தேதி திருமணம் செய்துகொண்டனர். திருமணம் ஆகி 4 மாதங்களே முடிந்துள்ள நிலையில், விக்னேஷ் சிவன் தனது டுவிட்டர் இரண்டு குழந்தைகளுக்கு நாங்கள் பெற்றோர் ஆகியுள்ளோம் என பதிவிட்டு இருந்தார்.

1 வாரத்தில் அறிக்கை..தேவைப்பட்டால் நயன் - விக்கி தம்பதியிடம் விசாரணை - அமைச்சர் தகவல் | Details Gathered On Nayan Vicky Baby Case Minister

அவர்கள் வாடகை தாய் மூலம் இரட்டை குழந்தைகள் பெற்றுக்கொண்டது கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த சர்ச்சை பல்வேறு கோணங்களிலும் விவாதிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சுப்பிரமணியன்,

 அறிக்கை தாக்கல்?

வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற்ற நயன்தாரா-விக்னேஷ் சிவனிடம் விளக்கம் கேட்கப்படும் என்றும் திருமணமாகி 5 ஆண்டுகள் ஆன பின்னரே வாடகை தாய் மூலம் குழந்தை பெற இயலும். இணை இயக்குனர் தலைமையிலான 3 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டு, அந்த குழுவினர் விசாரணையை தொடங்கியுள்ளனர்.

நயன்தாரா, விக்னேஷ் சிவன் சிகிச்சை பெற்ற மருத்துவமனை குறித்தான விவரங்கள் சேகரிக்கப்பட்டு வருகிறது. சுகாதாரத்துறை சார்பில் அமைக்கப்பட்ட 3 பேர் கொண்ட குழுவினர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும், இந்த விசாரணைக் குழுவினர் ஒரு வாரத்தில் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது என தெரிவித்தார்.