இரட்டை குழந்தைகள்... விசாரணை வளையத்தில் நயன் - விக்கி : அமைச்சர் மா.சுப்பிரமணியன் பரபரப்பு தகவல்
வாடகைத் தாய் மூலம் இரட்டை குழந்தைகளை பெற்ற நயன்தாரா, விக்னேஷ் குறித்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் பரபரப்பு தகவல் கொடுத்துள்ளார்.
நயன்தாரா - விக்னேஷ் சிவன்
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை நயன்தாரா. இவரும், இயக்குனர் விக்னேஷ் சிவனும் கடந்த ஜூன் 9-ம் தேதி காதல் திருமணம் செய்து கொண்டனர். திருமணம் நடந்து 4 மாதமே ஆன நிலையில், இயக்குநர் விக்னேஷ் சிவன் தனது டுவிட்டர் பக்கத்தில், நயன்தாராவும், நானும் அப்பா, அம்மா ஆகிவிட்டோம் என்று இரட்டை குழந்தையின் புகைப்படத்தை வெளியிட்டார்.
சலசலப்பில் தமிழ் சினிமாத்துறை
திருமணமாகி 4 மாதங்களே ஆன நிலையில், நயன்தாரா-விக்னேஷ் சிவன் இருவரும் வாடகை தாய் மூலம் இரட்டை குழந்தைகள் பெற்றுக்கொண்ட சம்பவம், தமிழ் சினிமாவில் பெரும் பரபரப்பும், சலசலப்பும் ஏற்பட்டுள்ளது.
தற்போது இந்த விவகாரம் சமூகவலைத்தளங்களில் பேசும்பொருளாக மாறியுள்ளது. இதனையடுத்து, அந்த வாடகைத்தாய் பற்றி தெரிந்து கொள்ள பலரும் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
நயன்தாரா-விக்னேஷ் சிவன் இருவரும் தங்கள் திருமணத்திற்கு முன்பே இதற்காக திட்டமிட்டு கருமுட்டை, உயிரணு ஆகியவற்றை சென்னையிலிருக்கும் பிரபலமான மருத்துவர்கள் மூலம் வாடகைதாய்க்கு செலுத்தியுள்ளதாகவும், குழந்தைகள் குறை பிரசவத்தில் பிறந்துள்ளதால், மருத்துவர்களின் கண்காணிப்பில் வைக்கப்பட்டிருப்பதாகவும் சொல்லப்படுகிறது.
வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டுமானால் சில சட்ட விதிகள் நடைமுறையில் உள்ளன. ஆனால் நடிகை நயன்தாரா இந்த விசயத்தில் அனைத்து விதிகளையும் மீறி இருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்திருக்கிறது.
விசாரணை வளையத்தில் நயன்-விக்கி
இந்நிலையில், இன்று மதுரையில் செய்தியாளர்களை தமிழக அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேரில் சந்தித்தார். அப்போது செய்தியாளர்கள் வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற்ற நயன்தாரா - விக்னேஷ் சிவன் குறித்து அவரிடம் கேள்வி எழுப்பினர்.
அதற்கு பதிலளித்து பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், நயன்தாரா - விக்னேஷ் சிவன் தம்பதி வாடகைத் தாய் தாய் மூலம் குழந்தை பெற்ற விவகாரம் தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது. அவர்களிடம் விரிவான அறிக்கை கேட்கப்பட்டிருக்கிறது.
இது குறித்த விசாரணை அறிக்கை பெற்றவுடன் அதில் விதிமீறல் இருக்கிறதா, முரண்பாடு இருக்கிறதா? என்பதை கண்டறிந்து அதற்கேற்ற சட்டப்பூர்வமாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.