ஆரஞ்சு அலர்ட், ரெட் அலர்ட்களுக்கு உள்ள அர்த்தங்கள் தெரியுமா ?இதை பாருங்க!
தமிழகத்தில் இன்று முதல் வரும் அக்டோபர் 17ஆம் தேதி வரை அதிக கனமழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
கனமழை
தென்கிழக்கு வங்கக் கடல் பகுதியில், குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகி வருகிறது என்றும், இதனைத் தொடர்ந்து,காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுப்பெற்று மேற்கு - வடமேற்கு திசையில் நகர்ந்து புதுவை, வடதமிழகம், தெற்கு ஆந்திர கடற்கரை அருகில் நிலை கொள்ளும் என்றும் சென்னை வானிலை மையம் நேற்று அறிவித்திருந்தது.
இதன் காரணமாக, அடுத்து வரும் 5 தினங்களுக்குத் தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் மழை தொடரும் என்றும் கூறப்பட்டுள்ளது. இந்த நிலையின் இந்தியாவில் புவி அறிவியல் அமைச்சகத்தின்கீழ் செயல்பட்டு வரும் இந்திய வானிலை ஆய்வு மையம் (India Meteorological Department),
வானிலையில் கணிப்புகள், வானிலை முன்னறிவிப்புகள், நிலநடுக்கம் கண்காணிப்பு உள்ளிட்ட பல்வேறு பணிகளை மேற்கொண்டு வருகிறது. இதற்காகச் சென்னை, கவுகாத்தி, கொல்கத்தா, மும்பை, நாக்பூர், டெல்லி உள்ளிட்ட 6 நகரங்களில் மண்டல வானிலை மையங்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன.
இந்த நிலையில் கனமழையின் போது சில மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்டும், சில மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கையும் கொடுக்கப்பட்டிருக்கிறது. இதற்கான முழுமையான அர்த்தம் என்ன என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.
அர்த்தங்கள் தெரியுமா ?
பச்சை அலெர்ட்: ஒரு மணி நேரத்திற்கு 70 மில்லி மீட்டர் எனும் அளவில் மழை பெய்யும். இந்த மழை சாதாரணமானதாக (No Heavy Rainfall) எடுத்துக் கொள்ளப்படுகிறது. இதனால் எவ்விதப் பாதிப்புமில்லை .இதனைப் பச்சை எச்சரிக்கை என்று குறிப்பிடப்படுகிறது.
மஞ்சள் அலர்ட்: 24 மணி நேரத்திற்கு 64.5 மில்லி மீட்டரிலிருந்து 115.5 மில்லி மீட்டர் வரை பெய்யும் மழை.இந்த மழையினை அடைமழை அல்லது கனமழை (Heavy Rainfall) என்கின்றனர். இம்மழையினால் ஒரு சில பாதிப்புகள் ஏற்பட்டாலும், பெருமளவிலான பாதிப்புகள் இருக்காது. இதற்கு மஞ்சள் அலர்ட் எச்சரிக்கையாக அடையாளப்படுத்தப்படுகிறது.
ஆரஞ்சு அலர்ட்: 24 மணி நேரத்திற்கு 115.6 மில்லி மீட்டரிலிருந்து 204.4 மில்லி மீட்டர் வரை பெய்யும் மழை இந்த மழையினை பெரு மழை அல்லது மிகக் கனமழை (Very Heavy Rainfall) என்று கூறப்படுகிறது .
இப்பெருமழையினால் பல்வேறு பாதிப்புகள் ஏற்படக்கூடிய வாய்ப்பிருக்கிறது.இதற்கு ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கையாக அடையாளப்படுத்தப்படுகிறது.