திட்டங்களுக்கு கலைஞர் பெயர் வைக்காமல்.. கரப்பான்பூச்சி பெயரா வைக்கனும் - உதயநிதி கேலி!

Udhayanidhi Stalin Tamil nadu Edappadi K. Palaniswami trichy
By Swetha Nov 25, 2024 03:40 AM GMT
Report

திட்டங்களுக்கு கலைஞர் பெயருக்கு பதிலாக கரப்பான்பூச்சி பெயரையா வைப்பது என்று உதயநிதி பேசியுள்ளார்.

உதயநிதி

திருச்சி மாவட்டத்தில் பெரம்பலூர் நாடாளுமன்ற உறுப்பினர் கேஎன்.அருண்நேருவின் அலுவலகத்தை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார். அப்போது பேசிய அவர், கலைஞர் கொள்கைகளை லட்சியங்களை ஒவ்வொரு தொகுதியிலும் கொண்டு போய் சேர்க்கிறோம்.

திட்டங்களுக்கு கலைஞர் பெயர் வைக்காமல்.. கரப்பான்பூச்சி பெயரா வைக்கனும் - உதயநிதி கேலி! | Deputy Cm Udhayanidhi Slams Saying Eps Cockroach

அவருடைய திட்டங்களை செயல்படுத்துகிறோம். எல்லா திட்டங்களுக்கும் கலைஞர் பெயரை வைப்பதா என இபிஎஸ் கேட்கிறார், நல்ல நல்ல திட்டங்களுக்கு கலைஞர் பெயரை வைப்பதற்கு பதிலாக கர்ப்பான்பூச்சி பெயரையா வைப்பது. நான் யாரை சொல்கிறேன் என உங்களுக்கு தெரியும்.

அரசியலுக்கு வந்திருந்தா.. நிம்மதி இழந்து.. சீரியஸாக பேசிய ரஜினி - குலுங்கி சிரித்த ஈபிஎஸ்!

அரசியலுக்கு வந்திருந்தா.. நிம்மதி இழந்து.. சீரியஸாக பேசிய ரஜினி - குலுங்கி சிரித்த ஈபிஎஸ்!

கரப்பான்பூச்சி 

உதயநிதிக்கு துணை முதலமைச்சர் பதவி எதற்கு கொடுத்தீர்கள் என கேட்பதற்கு இபிஎஸ்-க்கு தகுதி கிடையாது. 2026 சட்டமன்றத் தேர்தல் பணிகளை பரப்புரையில் ஆரம்பிக்க திமுக தலைவர் குறிப்பிட்டுள்ளார், நாடாளுமன்றத் தேர்தலில் 100 சதவீதம் வெற்றி கொடுத்தீர்கள்,

திட்டங்களுக்கு கலைஞர் பெயர் வைக்காமல்.. கரப்பான்பூச்சி பெயரா வைக்கனும் - உதயநிதி கேலி! | Deputy Cm Udhayanidhi Slams Saying Eps Cockroach

வருகிற சட்டமன்றத் தேர்தலில் குறைந்தது 200 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும் என தலைவர் குறிப்பிட்டுள்ளார், அதிமுக பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன், திருச்சியில் பேசியபோது எங்கள் கூட்டணிக்கு வருவதற்கு 100 கோடி கேட்கிறார்கள் என பேசியுள்ளார்

எந்த கட்சிக்கும் இப்படி ஒரு நிலை வந்திருக்கா என தெரியவில்லை. சட்டமன்றத் தேர்தலில் 200 தொகுதியிலும் வெற்றி பெற வேண்டும். மீண்டும் திமுக தான் ஆட்சி அமைக்க போகிறது. திமுக தலைவர் தான் மீண்டும் முதல்வராக பதவி ஏற்பார் என்று தெரிவித்துள்ளார்.