துணை முதல்வர் உதயநிதி, மகன் இன்பநிதிக்கு கொலை மிரட்டல் - பரபரப்பு
துணை முதல்வர் உதயநிதி மற்றும் அவரது மகன் இன்பநிதிக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
கொலை மிரட்டல்
டி.ஜி.பி., அலுவலகத்தின் இ - மெயிலுக்கு, தொடர்ச்சியாக சினிமா பிரபலங்கள், அரசியல் கட்சிகளை சேர்ந்தோர் வீடுகளுக்கு, வெடிகுண்டு மிரட்டல்கள் தினமும் குவிந்து வருகிறது.

தொடர்ந்து போலீசாரும், மிரட்டல் விடுக்கப்பட்டோரின் வீடுகளில், மோப்ப நாய் மற்றும் வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர்கள் உதவியுடன், சோதனை நடத்தி வருகின்றனர்.
தீவிர விசாரணை
இந்நிலையில், டி.ஜி.பி., அலுவலக இ - மெயிலுக்கு, தமிழர் விடுதலை அமைப்பு என்ற பெயரில், மர்ம நபர்கள், துணை முதல்வர் உதயநிதி, அவரது மகன் இன்பநிதிக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.
இருவரையும் கொலை செய்ய, 10 கோடி ரூபாய் பேரம் பேசப்பட்டு இருப்பதாக, இ - மெயிலில் தெரிவித்துள்ளனர்.
இது பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.