வீடு, வொர்க் பர்மிட்னு எதுவும் வேண்டாம்; அழைக்கும் பிரபல நாடு - செம சான்ஸ்!

Denmark
By Sumathi Nov 28, 2023 06:26 AM GMT
Report

டென்மார்க் அரசு முக்கியமான ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

டென்மார்க்

ஐரோப்பிய நாடுகளில் பணியாற்ற விரும்பும் அனைத்து ஊழியர்களுக்கும் சிறப்பான வாய்ப்பு கிடைத்துள்ளது. டிசம்பர் 17 ஆம் தேதி முதல் டென்மார்க்கில் பணியாற்ற விரும்பும் வெளிநாட்டவர்களுக்கும், அந்நாட்டில் இருக்கும் நிறுவனங்களுக்கும் புதிய விதிமுறைகள் அமலாக்கம் செய்யப்பட்டுள்ளது.

denmark

அதன் மூலம், ஒரு குறுகிய காலத்திற்கு எவ்விதமான வொர்க் பர்மிட், வீடு ஆகியவை இல்லைமல் பணியாற்ற அனுமதிக்கிறது. தனிநபர்கள் டென்மார்க் நிறுவனத்தில் 180 நாட்களுக்குள் இரண்டு வெவ்வேறு காலகட்டங்களில் பணியாற்றலாம்.

10,000 மனித மூளைகளை பக்கெட்டில் சேமித்த பல்கலைக்கழகம் - பின்னணி என்ன?

10,000 மனித மூளைகளை பக்கெட்டில் சேமித்த பல்கலைக்கழகம் - பின்னணி என்ன?

சிறப்பு சலுகை

ஒவ்வொரு வேலை காலமும் அதிகபட்சமாக 15 நாட்கள் வரை மட்டுமே இருக்க வேண்டும். முதல் முறைக்கும் 2வது முறைக்கும் குறைந்தது 14 நாட்கள் வெளியேறி இருக்க வேண்டும். இந்த சலுகை நிர்வாக பணியில் இருப்பவர்களுக்கும், உயர் மற்றும் நடுத்தரே பணியில் இருப்பவர்களுக்கு மட்டுமே பொருந்தும்.

job offer

நிர்வாக குழு உறுப்பினர்களுக்கு 40 நாளும், பிஸ்னஸ் டிரிப்-ல் வரும் வெளிநாட்டு ப்ரொபஷனல் அதிகாரிகளுக்கு 90 நாள் வரையில் இருக்க அனுமதிக்கப்படுகிறது. சரியான தொழில்நுட்ப உதவிகள் இல்லாமல் சிக்கிக்கொண்டு இருக்கும் திட்டங்களை செயல்படுத்த இந்த திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது.