தீவிரமெடுக்கும் டெங்கு காய்ச்சல்; ஒரேநாளில் 8 பேர் பலி - மக்களே கவனம் !
டெங்கு காய்ச்சலுக்கு ஒரேநாளில் 8 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
டெங்கு காய்ச்சல்
வங்காளதேசத்தில் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. மேலும், காய்ச்சல், சளி, தொண்டையில் ஏற்படும் கிருமித்தொற்று உள்ளிட்ட பாதிப்புகளுடன் மருத்துவமனைக்கு வருவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
தொடர்ந்து இதனை கட்டுப்படுத்த அந்நாட்டு சுகாதாரத்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்நிலையில் டெங்கு காய்ச்சலுக்கு அந்நாட்டில் ஒரேநாளில் 8 பேர் உயிரிழந்துள்ளனர்.
8 பேர் பலி
மேலும், 994 பேருக்கு புதிதாக டெங்கு காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் வங்காளதேசத்தில் டெங்குவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 4 ஆயிரத்து 173ஆக அதிகரித்துள்ளது. நடப்பு ஆண்டில் மட்டும் உயிரிழந்தோர் எண்ணிக்கை 407 ஆக அதிகரித்துள்ளது.
இதற்கிடையில் சென்னை, கிருஷ்ணகிரி, கோவை, தேனி, தஞ்சை உள்ளிட்ட 10 மாவட்டங்களில் டெங்கு பாதிப்பு அதிகரித்துள்ளது. அரசு மருத்துவமனையில் மொத்தம் 98 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.