இதுபோன்ற பெண்கள் இருக்கும் வரை..டெலிவரி ஊழியர் தற்கொலை - சிக்கிய கடிதம்!

Tamil nadu Chennai
By Swetha Sep 19, 2024 10:30 AM GMT
Report

தாமதமாக உணவை பெற்ற பெண் புகார் அளித்ததால் டெலிவரி ஊழியர் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

டெலிவரி ஊழியர்

சென்னை கொளத்தூரை சேர்ந்த பவித்ரன்,கல்லூரியில் மூன்றாம் ஆண்டு பயின்று வந்தார். பகுதி நேரமாக உணவு டெலிவரி செய்யும் வேலையயும் பார்த்து வந்துள்ளார்.

இதுபோன்ற பெண்கள் இருக்கும் வரை..டெலிவரி ஊழியர் தற்கொலை - சிக்கிய கடிதம்! | Delivery Boy Writtes Letter And Commits Suicide

இந்நிலையில், கடந்த 11ம் தேதி கொரட்டூரில் வசித்து வரும் பெண் ஒருவருக்கு உணவு டெலிவரி கொடுக்க சென்றதாக தெரிகிறது. அப்போது அங்கிருந்த பெண் உணவை காலதாமதமாக கொண்டு வந்ததாக கூறி கடுமையான வார்த்தைகளால் திட்டியிருப்பதாகவும் கூறப்படுகிறது.

கணவன் ஆணவ படுகொலை; மனைவி தற்கொலை - சிக்கிய உருக்கமான கடிதம்!

கணவன் ஆணவ படுகொலை; மனைவி தற்கொலை - சிக்கிய உருக்கமான கடிதம்!

சிக்கிய கடிதம்

இதனால், ஆத்திரமடைந்த பவித்ரன் அந்த பெண்ணின் வீட்டுக்கு சென்று ஜன்னல் கண்ணாடியை உடைத்துவிட்டு வந்துள்ளார். இது தொடர்பாக அந்த பெண் அளித்த புகாரின் அடிப்படையில் பவித்ரன் மீது வழக்குப்பதிவு செய்து எச்சரித்துள்ளனர்.

இதுபோன்ற பெண்கள் இருக்கும் வரை..டெலிவரி ஊழியர் தற்கொலை - சிக்கிய கடிதம்! | Delivery Boy Writtes Letter And Commits Suicide

இதனால் மன உளைச்சலுக்கு ஆளான பவித்ரன் தனது மரணத்திற்கு அப்பெண் தான் காரணம் என்றும் இது போன்ற பெண்கள் உலகில் இருக்கும் வரை இன்னும் பல மரணங்கள் நிகழும் என்றும் உருக்கமாக கடிதம் எழுதிவிட்டு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.