சென்னை அணிக்கு சிக்கலை உண்டாக்கிய டெல்லி வெற்றி - எமனாக குறுக்கே நிற்கும் பெங்களூரு
லக்னோ அணிக்கு எதிராக நடைபெற்ற லீக் ஆட்டத்தில் டெல்லி அணி 19 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.
டெல்லி பேட்டிங்
டாஸ் வென்ற லக்னோ அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. டெல்லி அணியின் துவக்க ஆட்டக்காரர் ஜேக் ஃப்ரேசர் முதல் பந்தில் டக் அவுட்டாகி வெளியேறினார். அதனை தொடர்ந்து அபிஷேக் போரல் மற்றும் ஷாய் ஹோப் நேர்த்தியாக விளையாடினர். ஷாய் ஹோப் 38 ரன்னிலும், அபிஷேக் போரல் 53 ரன்களில் ஆட்டமிழந்தார்.
இறுதியில் அதிரடி காட்டிய ட்ரிஸ்டன் 57 ரன்கள் எடுத்து அவுட்டாக, கேப்டன் ரிஷப் பந்த் 33 ரன்னும், அக்ஸர் படேல் 14 ரன்களும் எடுக்க 20 ஓவர் டெல்லி அணி 208/4 ரன்கள் எடுத்தது.
209 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய லக்னோ அணி கேப்டன் கே.எல்.ராகுல் 5 ரன், குயின்டன் டி காக் 12 ரன், ஸ்டோய்னிஸ் 5 ரன், தீபக் ஹூடா 0, ஆயுஷ் பதோனி 6 ரன் என அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.
அணிக்கு நம்பிக்கை அளிக்கும் வகையில் ஆடிய நிக்கோலஸ் பூரன் 27 பந்துகளில் 67 ரன்களை குவிக்க, இறுதியில் வந்த அர்ஷத் கான் 58 ரன்கள், விளாசிய போதிலும் 19 ரன்கள் வித்தியாசத்தில் லக்னோ அணி தோல்வியை சந்தித்தது. 20 ஓவர்களில் 189/9 ரன்கள் மட்டுமே லக்னோ எடுத்தது. வெற்றி பெற்ற டெல்லி அணி 14 போட்டிகளில் 7 வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் 5 இடத்தில் உள்ளது.
அந்த அணியின் Play 0ff வாய்ப்பு இன்னும் முழுவதுமாக முடியவில்லை. போட்டியில் தோல்வியடைந்த லக்னோ அணிக்கு இன்னும் ஒரு போட்டி மீதமுள்ளது. அதே நேரத்தில், வரும் 18-ஆம் தேதி நடைபெறும் பெங்களூரு சென்னை அணி போட்டியை இந்த போட்டி இன்னும் சுவாரசியமாக மாற்றியுள்ளது.
அப்போட்டியில், சென்னை வெற்றி பெற்றாலே போதும். ஆனால், அதே நேரத்தில் பெங்களூரு அணி தகுதி பெற 18 ரன்கள் அல்லது 18.2 ஓவர்களில் வெற்றியை பெறவேண்டும் என்ற கட்டாயமும் உள்ளது. ரசிகர்களுக்கு இப்போதே பெரும் எதிர்பார்ப்புகள் எழுந்துள்ளது.