திருமண விழாவில் நடனம் ஆடிய மணமகன்.. மணப்பெண்ணின் தந்தை எடுத்த திடீர் முடிவு - அதிர்ச்சி சம்பவம்!
திருமண விழாவில் மணமகன் நடனம் ஆடியதால் மணப்பெண்ணின் தந்தை திருமணத்தையே நிறுத்தியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
டெல்லி
டெல்லியைச் சேர்ந்த 26 வயதான மணமகன் ஒருவருக்குத் திருமணம் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இதற்காக வரவேற்று விழா நடைபெற்றுள்ளது. அப்போது அப்போது மேடையில் நின்றிருந்த மணமகனை, அவரது நண்பர்கள் பிரபலமான பாலிவுட் பாடல் 'சோலி கே பீச்சே க்யா ஹை' என்ற பாடலுக்கு நடனம் ஆடச் சொல்லி வற்புறுத்தியுள்ளனர்.
மேலும் திருமண நிகழ்ச்சியில் நண்பர்கள் வற்புறுத்திக் கேட்பதால், மாப்பிள்ளை, அவர்களுடன் இணைந்து நடனம் ஆடியுள்ளார்.மேலும் சில விருந்தினர்கள் அவரை உற்சாகப்படுத்தினர். இதனைக் கண்ட மணமகளின் குடும்பத்தினரும் தந்தையும் கோபமடைந்தனர்.
மணமகன்
பின்னர் இரு குடும்பங்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு பிரச்சனையாக மாறியுள்ளது. இதனால் மணமகனின் தந்தை திருமணத்தையே நிறுத்தியுள்ளார். மேலும் மணமகனின் இந்தச் செயல் எனது குடும்பத்தின் மதிப்பை அவமதிப்பதாக இருக்கிறது" எனக் கூறி தனது மகளை அழைத்துக் கொண்டு வெளியேறி இருக்கிறார்.
திருமண விழாவில் நண்பர்களுடன் இணைந்து நடனம் ஆடியதற்காக, மணமகனின் திருமணம் நின்றுபோன செய்தி சமூக ஊடகங்களின் பேச்சாக மாறியது.