வகுப்பறையில் மாணவரை திருமணம் செய்த பேராசிரியை..வெளியான அதிர்ச்சி வீடியோ!
வகுப்பறையில் மாணவரும், ஆசிரியையும் திருமணம் செய்து கொள்ளும் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
மேற்கு வங்காளம்
மேற்கு வங்காள மாநிலத்தில் நாடியா மாவட்டத்தில் அபுல் கலாம் ஆசாத் பல்கலைக்கழகம் செயல்பட்டு வருகிறது.

இந்த பல்கலைக்கழகத்தில் பணியாற்றி வரும் பேராசிரியை ஒருவரும், முதலாம் ஆண்டு மாணவர் ஒருவரும், மணப்பெண் கோலத்தில் இந்து - வங்காள முறைப்படி,திருமணம் செய்து கொள்ளும் வீடியோ இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதற்கு பல்வேறு தரப்பிலிருந்து கண்டங்கள் எழுந்தனர்.இது விவகாரம் தொடர்பாக 3 பேராசிரியைகளைக் கொண்ட குழு ஒன்று அமைக்கப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
திருமணம்
இதற்கிடையே , இந்த விவகாரம் குறித்து பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் தபஸ் சக்ரவர்த்தி கூறுகையில்,’உளவியல் துறை சார்ந்த 30 வினாடிகள் கொண்ட ஆவணப்படம் மாணவர்களுக்காக எடுத்துரைக்கப்பட்டதாகக் கூறினார்.

மேலும் பேராசிரியை ஒழுக்கக்கேடான விஷயம் எதிலும் ஈடுபடவில்லை. அது முற்றிலும் பாடம் சார்ந்து நடத்தப்பட்ட விஷயம் என்று கூறினார். இந்த விவகாரம் பற்றி குழு விசாரணை நிறைவடையும் வரை, அந்த மாணவரையும் வகுப்புக்கு வரவேண்டாம் என்று கூறினார். எனினும் இந்த வீடியோ பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
ஷிரந்தி ராஜபக்சவுக்கு பயணத் தடை...! விமான நிலையத்திலேயே கைதாகும் அபாயம் - சிக்கலில் மகிந்த IBC Tamil