தண்ணீர் பற்றாக்குறைவு போராடிய மக்கள் - தண்ணீரை பிய்த்தடித்து விரட்டிய போலீஸ்
தண்ணீர் தட்டுப்பாடு பிரச்சனை நாட்டின் தலைநகர் டெல்லியை கடுமையாக பாதித்துள்ளது.
தண்ணீர் தட்டுப்பாடு
வெயில் காலம் நெருங்கும் போது நாட்டின் பல இடங்களில் தண்ணீர் தட்டுப்பாடு பெறும் பாதிப்பை உண்டாக்கிவிட்டு சென்றுவிடுகிறது. குறிப்பாக வடஇந்தியா கடந்த சில வருடங்களாக கடும் நெருக்கடியை சந்தித்துள்ளது.
நாட்டின் தலைநகரான டெல்லியில் கடும் போராட்டங்கள் வெடித்துள்ளது. தனியார் லாரிகளில் அதிகவிலைக்கு தண்ணீர் வாங்கும் அவலத்திற்கு டெல்லி மக்கள் சென்றுள்ளார்கள்.
அதே நேரத்தில் நடுத்தரவர்க்க மக்கள் போராட்டங்களில் இறங்கிவிட்டார்கள். மாநிலத்தில் ஆட்சியில் இருக்கும் ஆம் ஆத்மீ இதற்கு மத்திய அரசை குற்றம்சாட்டி வரும் நிலையில், டெல்லி பாஜகவினர் கடுமையாக ஆளும் ஆம் ஆத்மீ கட்சியினரை விமர்சித்து வருகிறார்கள்.
தண்ணீர் வைத்தே..
இவர்களால் கடும் நெருக்கடியை சந்திப்பவர்கள் பொதுமக்கள் தான். இந்த சூழ்நிலையில் தான் டெல்லி பாஜக தலைவர் ரமேஷ் பிதுரி தலைமையில் டெல்லி ஓக்லாவில் போராட்டம் வெடித்தது.
இந்த போராட்டத்தை கலைந்து போகும் படி, போலீசாரை கேட்டதை அடுத்தும் போராட்டம் நீடித்த நிலையில், தண்ணீர் டேங்கர் கொண்டு வந்து தண்ணீரை பீய்ச்சி அடித்து கூட்டத்தை போலீசார் கலைத்தனர்.
தண்ணீர் தட்டுப்பாடிற்காக போராடியவர்களை தண்ணீரை கொண்டே விரட்டி அடித்த வீடியோ சமூகவலைத்தளத்தில் வைரலானதை தொடர்ந்து பலரும் விமர்சனங்களை வைத்து வருகிறார்கள்.