40 நாட்களில் 13 ஓட்டல்கள்.. சாமியார் தில்லாலங்கடி - விசாரணையில் பகீர் தகவல்!
மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்த சாமியார் கைது செய்யப்பட்டுள்ளார்.
பாலியல் தொல்லை
டெல்லி, தனியார் கல்வி நிறுவனத்தில் 17 மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக அந்த கல்வி நிறுவனத்தின் இயக்குநர் சாமியார் சைத்தன்யாநந்தா சரஸ்வதி மீது புகாரளிக்கப்பட்டது.
அவரை டெல்லி போலீசார் கைது செய்த நிலையில், விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதில் வெளிநாட்டில் இருந்து இந்தியாவுக்கு அந்த சாமியார் திரும்பியதும்,
சாமியார் கைது
அப்போதே தன் மீதான குற்றச்சாட்டுகள் குறித்து அறிந்துக்கொண்டு, சுமார் 40 நாட்களுக்கு 13 ஓட்டல்களில் மாறி மாறி தங்கியிருந்தது தெரியவந்தது. சிசிடிவி கேமரா இல்லாத சிறிய ஓட்டல்களை தேர்வு செய்து தங்கியுள்ளார்.
செல்போன் சிக்னலை வைத்து தன்னை டிராக் செய்யாமல் இருக்க தன்னிடம் இருந்த 3 செல்போன்கள், ஐபேட் ஆகியவற்றை அவர் பயன்படுத்தாமல் இருந்துள்ளார்.
மேலும், சாமியார் தனது செல்போன், ஐபேட்டின் பாஸ்வேர்ட்டை இதுவரை போலீசாரிடம் சொல்லவில்லை என்று போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.