வலியால் துடித்த பெண்... ரோட்டிலேயே குழந்தையை பெற்றெடுத்த அவலம் - பரவும் வீடியோ!

Pregnancy Viral Video Delhi
By Sumathi Jul 19, 2022 09:22 AM GMT
Report

மருத்துவமனை வளாகத்திற்குள் உள்ள சாலையில் பெண் ஒருவர் குழந்தையைப் பெற்றெடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பிரசவ வலி 

டெல்லியில் உள்ள சப்தர்ஜங் மருத்துவமனையில் இருந்து அதிர்ச்சித் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. டெல்லியில் வசிக்கும் பெண் ஒருவருக்கு பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. இதனால் அந்த பெண் வலியால் துடித்தாள்ளார்.

வலியால் துடித்த பெண்... ரோட்டிலேயே குழந்தையை பெற்றெடுத்த அவலம் - பரவும் வீடியோ! | Delhi Safdarjung Hospital Viral News

அவரது குடும்பத்தினர் உடனடியாக அவரை சப்தர்ஜங் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர், ஆனால் மருத்துவமனை நிர்வாகத்தின் அலட்சியத்தால் அவர் உடனடியாக அனுமதிக்கப்படவில்லை.

அதிர்ச்சி வீடியோ

இதனால், சாலையிலேயே குழந்தையைப் பெற்றெடுக்கும் நிலைக்கு அந்தப் பெண் தள்ளப்பட்டார். இது தொடர்பான அதிர்ச்சி வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. அதில், பிரசவ வலியால் அவதிப்படும் பெண்ணை சுற்றி மற்ற பெண்கள் வட்டம் அமைத்து, பிரசவமும் அங்கேயே நடந்தது.

மருத்துவமனை நிர்வாகத்தின் பாதுகாவலர்களும் வீடியோவில் காணப்படுகின்றனர். மேலும் இதுகுறித்து, இரவு முதல் இவர்கள் மருத்துவமனையில் இருப்பதாக மற்றொரு பெண் குற்றம் சாட்டினார்.

மருத்துவமனை அலட்சியம்

ஆனால் மருத்துவர்கள் அவர்களை அனுமதிக்க மறுத்துவிட்டனர். அந்த பெண்ணுக்கு வலி இல்லை என மருத்துவர்கள் தெரிவித்தனர். காலை மருத்துவமனை வளாகத்தில் பெண்ணுக்கு குழந்தை பிறந்தது.

குழந்தை நலமுடன் இருப்பதாக கூறப்படுகிறது. பிறந்த குழந்தையை அட்மிட் செய்வதற்காக மருத்துவமனை செவிலியர் அழைத்துச் சென்றுள்ளார். வலி தாங்க முடியாமல் அலறி துடித்த பெண்ணை உடனடியாக அனுமதிக்காமல்,

சாலையில் அந்தப் பெண் குழந்தையைப் பெற்றெடுத்தது மூலம் மருத்துவமனை நிர்வாகத்தின் அலட்சியம் அம்பலமாகியுள்ளது. மேலும் இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவி அதிர்வலைகளை ஏற்படுத்துயுள்ளது.