டெல்லியில் ராவண வதம்..அம்பு எய்த குடியரசுத் தலைவர்முர்மு மற்றும் பிரதமர் மோடி!

Narendra Modi Delhi Draupadi Murmu
By Vidhya Senthil Oct 13, 2024 02:55 AM GMT
Vidhya Senthil

Vidhya Senthil

in இந்தியா
Report

டெல்லி செங்கோட்டையில் உள்ள பூங்காவில் நடைப்பெற்ற ராவண வதம் செய்யும் நிகழ்ச்சியில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு மற்றும் பிரதமர் மோடி கலந்து கொண்டனர்.

டெல்லி 

ஸ்ரீ ராமர் ராவணனை வென்று அயோத்திக்குத் திரும்பிய வெற்றியைப் போற்றும் விதமாகத் தசரா விழாவை மக்கள் கொண்டாடி வருகின்றனர்.இந்த தசரா பண்டிகை கொண்டாட்டம் பத்து நாட்கள் நடைபெறும்.

pm modi

அந்த வகையில் தசரா விழாவின் இறுதி நாளான நேற்று, ஸ்ரீ தர்மிக லீலா குழு சார்பில் டெல்லியில் ராவண வத நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.

மகாத்மா காந்தி இதனால்தான் காங்கிரஸை கலைக்க விரும்பினார் - மோடி பேச்சு

மகாத்மா காந்தி இதனால்தான் காங்கிரஸை கலைக்க விரும்பினார் - மோடி பேச்சு

இதில் கலந்து கொண்ட குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு மற்றும் பிரதமர் மோடி உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் கலந்து கொண்டனர்.அப்போது அந்த நிகழ்ச்சியில் ராமர், லட்சுமணன், அனுமர் உள்ளிட்ட வேடம் அணிந்தவர்களுக்குத் திலகம் இட்டனர்.

 ராவண வதம்

இதனைத் தொடர்ந்து, நடைபெற்ற ராமாயண நாடகத்தைக் கண்டு களித்தனர். பின்னர் குடியரசுத் தலைவர், திரௌபதி முர்மு மற்றும் பிரதமர் மோடி அம்பு எய்ய, ராவண வதம் நடைபெற்றது.

dhasra festival

இதனைத் தொடர்ந்து,டெல்லி நடைப்பெற்ற மற்றும் ஒரு நிகழ்ச்சியில் காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி மற்றும் மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தியும் விழாவில் கலந்து கொண்டனர். அவர்களும் ராமர் வேடம் அணிந்தவர்களுக்குத் திலகம் இட்டு, அம்பு எய்தி ராவண வதம் செய்தனர்.