உலகின் அதிக மக்கள் தொகை; டெல்லி 2வது இடம் - முதல் இடத்தில் எது தெரியுமா?
உலகின் அதிக மக்கள் தொகை கொண்ட நகரம் குறித்த பட்டியல் வெளியாகியுள்ளது.
மக்கள் தொகை
உலக மக்கள்தொகை தினமாக ஜூலை 11 அனுசரிக்கப்படுகிறது. அதனைத் தொடர்ந்து, சமீபத்திய ஐக்கிய நாடுகளின் உலக நகரமயமாக்கல் வாய்ப்புகள் அறிக்கை வெளியாகியுள்ளது.
அதன்படி, அதிக மக்கள் தொகை கொண்ட நகரங்களின் பட்டியலில் மூன்று இந்திய நகரங்கள் இடம் பெற்றுள்ளன. இந்த அறிக்கை கின் வளர்ந்து வரும் மக்கள்தொகையைப் பொறுத்து சவால்கள், வாய்ப்புகள் மற்றும் போக்குகள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதன் நோக்கமாக அமைந்துள்ளது.
இந்திய நகரங்கள்
2வது இடத்தைப் பிடித்த டெல்லி, இந்தியாவில் அதிக மக்கள்தொகை கொண்ட நகரமாக உருவெடுத்துள்ளது. மும்பை 9வது இடத்தில் உள்ளது. மூன்றாவதாக கொல்கத்தா உள்ளது. உலகின் அதிக மக்கள் தொகை கொண்ட நகரங்கள்,
1. டோக்கியோ, ஜப்பான் 2. டெல்லி, இந்தியா 3. ஷாங்காய், சீனா 4. டாக்கா, பங்களாதேஷ் 5. சாவோ பாலோ, பிரேசில் 6. கெய்ரோ, எகிப்து 7. மெக்சிகோ நகரம், மெக்சிகோ 8. பெய்ஜிங், சீனா 9. மும்பை, இந்தியா 10. ஒசாகா, ஜப்பான்