தொழுகையில் ஈடுபட்ட இஸ்லாமியர்களை எட்டி உதைத்த காவலர் - வைரலாகும் Video!
தொழுகையில் ஈடுபட்ட இஸ்லாமியர்களை காவல் அதிகாரி ஒருவர் எட்டி உதைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
எட்டி உதைத்த காவலர்
டெல்லி இந்தர்லோகில் உள்ள மசூதி ஒன்றில் வெள்ளிக்கிழமையை என்பதால் சிறப்பு தொழுகைக்கு ஏராளமான இஸ்லாமியர்கள் கூடினர். இதனால் மசூதிக்குள் போதிய இடம் இல்லாமல் நெருக்கடி ஏற்பட்டது.
இதனையடுத்து சிலர் மசூதிக்கு வெளியே சாலையில் ஓரத்தில் தொழுது கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த டெல்லி காவல்துறையின் உயர் அதிகாரி ஒருவர் சாலையின் ஓரமாக தொழுகையில் ஈடுபட்டிருந்த இஸ்லாமியர்களை காலால் எட்டி உதைத்தார். போலீஸ் அதிகாரியின் இந்த செயலை அங்கிருந்த பலரும் செல்போன்களில் வீடியோ எடுத்தனர்.
பணியிடை நீக்கம்
மேலும் இளைஞர்கள் உட்பட சிலர் அந்த அதிகாரியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இதற்கு பலரும் தங்களின் கண்டனங்களை தெரிவித்து வந்தனர். இந்நிலையில் இந்த சம்பவம் குறித்து பதிலளித்துள்ள இணை ஆணையர் (வடக்கு) மீனா, "இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை தொடங்கப்பட்டுள்ளது. அந்த போலீஸ் அதிகாரி பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். அவர் மீது ஒழுங்கு நடவடிக்கையும் எடுக்கப்பட்டுள்ளது" என்றார்.
People offering Namaz are being kicked by Police. This is absolutely shameful. What message is @DelhiPolice trying to give. @narendramodi @LtGovDelhipic.twitter.com/2rh2bYhBSi
— Mohammed Zubair (@zoo_bear) March 8, 2024