ரூ.4,30,000.. மகனின் மழலையர் பள்ளி பில்லை பகிர்ந்த தந்தை - அதிர்ந்த நெட்டிசன்கள்!
தனது மகனின் மழலையர் பள்ளி கட்டண பில்லை இணையத்தில் பகிர்ந்து தந்தை வேதனை தெரிவித்துள்ளார்.
தந்தை வேதனை
டெல்லி மாநிலம் குருகிராமை சேர்ந்த ஆகாஷ் குமார் என்பவர் தனது மகனை மழலையர் பள்ளியில் சேர்த்துள்ளார். அதற்கான கட்டணமாக ரூ.4,30,000 பெறப்பட்டுள்ளது. இந்த கட்டண பில்லை அவர் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டு வேதனை தெரிவித்துள்ளார்.
அதில் "எனது ஒட்டுமொத்த கல்வி செலவை விட, எனது மகன் படிக்கும் மழலையர் பள்ளியின் ஒராண்டுகல்வி கட்டணம் அதிகம். பதிவு கட்டணம் ரூ.10,000. ஆண்டு கட்டணம் ரூ.25,000. 4 காலாண்டுக்கு தலா ரூ.98,750 என ஓராண்டில் மொத்தம் ரூ.4,30,000 செலுத்த வேண்டியுள்ளது" என்று தெரிவித்துள்ளார்.
நெட்டிசன்கள் கேள்வி
இதனை "எனது மகன் நன்றாக விளையாடுவான்" என்ற கேப்ஷனுடன் அவர் பதிவிட்டுள்ளார். இந்த பதிவை நெட்டிசன்கள் வைரலாக்கியதுடன், தங்களது கருத்துக்களையும் பகிர்ந்துள்ளனர். அதில் "தற்போது கல்வி மாறிவிட்டது, கட்டும் பணத்துக்கு தரமான கல்வி உத்தரவாதமா?
My son's Playschool fee is more than my entire education expense :)
— Akash Kumar (@AkashTrader) April 12, 2024
I hope vo ache se khelna seekhle yaha! pic.twitter.com/PVgfvwQDuy
குழந்தைகளின் கல்விக்கு நவீன கட்டிடங்கள் மற்றும் வசதிகள் அவசியமா? தரமான கல்விக்கு சிறந்த ஆசிரியர்கள் தான் முக்கியம். வசதிகள் அல்ல. பல பன்னாட்டு நிறுவனங்கள் புதிதாக சேரும் ஊழியருக்கு இந்த கட்டணத்தை விட குறைவாகத்தான் சம்பளம் வழங்குகின்றன’’ என்று ஏராளமானோர் மன வேதனையை தெரிவித்துள்ளனர்.