இந்த சீரியல் பார்த்துதான் கொடூர கொலை - காதலன் ஷாக் வாக்குமூலம்!

Attempted Murder Crime Mumbai Death
By Sumathi Nov 15, 2022 07:19 AM GMT
Report

சைக்கோ கில்லர் சீரியலை பார்த்து கொலை செய்ததாக காதலன் அளித்துள்ள வாக்குமூலம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

காதல் விவகாரம்

மும்பையைச் சேர்ந்தவர் ஷிரத்தா. இவர் கால் செண்டர் ஒன்றில் பணியாற்றி வந்தார். அப்போது அஃப்தாப் அமீன் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு அவருடன் தனியாக வசித்து வந்துள்ளார். இந்நிலையில், ஷிரத்தாவின் தந்தை காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில் தனது மகளை காணவில்லை. அவர் வீடு பூட்டியிருந்தது என கூறியுள்ளார்.

இந்த சீரியல் பார்த்துதான் கொடூர கொலை - காதலன் ஷாக் வாக்குமூலம்! | Delhi Man Chopped Girlfriend Into 35 Pieces

அதன் அடிப்படையில், போலீஸார் அஃப்தாபை தேடி பிடித்து கைது செய்தனர். அப்போது, குற்றத்தை ஒப்புக்கொண்ட அவர் திடுக்கிடும் வாக்குமூலம் ஒன்றை அளித்துள்ளார். அதில், தானும் ஷிரத்தாவும் டெல்லியில் லிவ்விங் டுகெதர் முறையில் வாழ்ந்து வந்ததாகவும் அப்போது ஷிரத்தா தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு வற்புறுத்தியுள்ளார்.

கொடூர கொலை

இதனால் இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் சண்டை பெரிதாகி, ஷிரத்தாவை அஃப்தாப் தாக்கியபோது அவர் கத்தியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அஃப்தாப், அவரது வாயையும் மூக்கையும் தலையணை கொண்டு நீண்ட நேரம் அழுத்தியுள்ளார். அதில் அவர் துடிதுடித்து இறந்தார்.

இதனை யாருக்கும் தெரியாமல் மறைக்க திட்டமிட்டு, 300 லிட்டர் ப்ரிட்ஜை வாங்கியுள்ளார். அடுத்து தான் வேலை பார்கும் நட்சத்திர ஓட்டலுக்கு சென்று கறி வெட்டும் கத்தியை எடுத்து வந்து, ஷிரத்தாவின் கைகளை 3 துண்டாகவும் கால்களை 3 துண்டாகவும் உடலை மொத்தமாக 35 துண்டுகளாகவும் வெட்டியுள்ளார்.

வாக்குமூலம்

பின்னர் அந்த துண்டுகளை பிளாஸ்டிக் கவரில் போட்டு பிரிட்ஜில் வைத்துள்ளார். பின்னர் தினமும் இரவு 2 மணிக்கு வெளியே சென்று ஒவ்வொரு துண்டாக நாய்களுக்கு வீசி எறிந்துள்ளார். வீட்டில் துர்நாற்றம் வீசாமல் இருக்க தினமும் ஊதுபத்திகளை கொளுத்தி வைத்துள்ளார்.

மேலும், அமெரிக்க சைக்கோ கில்லர் தொடரான ‘டெக்ஸ்டர்’-ஐ பார்த்து தான் இவ்வாறு துண்டுத்துண்டாக வெட்டி வீசியதாக கூறினார். டெக்ஸ்டரும் இதே போன்று தான் கொல்லும் ஆட்களை வெட்டி பிளாஸ்டிக் கவரில் போட்டு கால்வாயில் தூக்கி வீசுவார். அதேபோல் செய்தால் கொலையில் இருந்து தப்பிவிடலாம் என நினைத்து இவ்வாறு செய்ததாக தெரிவித்துள்ளார்.