ஜம்மா மசூதிக்குள் பெண்களுக்கு தனியே அனுமதியில்லை - சர்ச்சையான உத்தரவு!

Delhi
By Sumathi 3 நாட்கள் முன்

ஜம்மா மசூதியில் பெண்கள் தனியாக வர பிறப்பிக்கப்பட்ட தடை திரும்பப் பெறப்பட்டது.

ஜம்மா மசூதி

இந்தியாவிலேயே மிகப்பெரிய மசூதிகளில் ஒன்று ஜம்மா. இங்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கானோர் வழிபாடு செய்யவும், பார்வையிடவும் வருகை தருகின்றனர். இந்நிலையில், இந்த ஜம்மா மசூதிக்குள் பெண் யாரும் ஆண் துணை இல்லாமல் தனியாகவோ அல்லது குழுவாகவோ வருகை தரக்கூடாது என தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

ஜம்மா மசூதிக்குள் பெண்களுக்கு தனியே அனுமதியில்லை - சர்ச்சையான உத்தரவு! | Delhi Jamma Masjid Woman Entry Ban

இதுகுறித்து, தடை பிறப்பித்த ஷாகி இசாம் சையது அகமது, "பாரம்பரியம் மிக்க இந்த மசூதி வளாகத்திற்குள் சில விரும்பத்தகாத சம்பவங்கள் நடப்பதை தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டது. வழிபாட்டுத் தலமான இங்கு சில பெண்கள் தனியாக வந்து தங்கள் ஆண் நண்பர்களை பார்க்க காத்திருக்கிறார்கள்.

சர்ச்சை உத்தரவு

இதை தவிர்க்கதான் இந்த கட்டுப்பாடு விதிக்கப்பட்டது. மசூதி, கோயில், குருத்தவார போன்ற எந்த இடங்களாகாக இருந்தாலும் வழிபாடு என்ற நோக்கத்திற்கு தான் வர வேண்டும்" எனத் தெரித்தார். ஆனால், இந்த தடை உத்தரவு மிகவும் பிற்போக்குதனமானது என பலர் கண்டனங்கள் எழுப்பினர்.

மேலும், டெல்லி மகளீர் ஆணையம் மற்றும் தேசிய மகளீர் ஆணையம் இந்த உத்தரவை கண்டித்து நோட்டீஸ் அனுப்பியது. இந்நிலையில், இந்த உத்தரவு திரும்ப பெறப்பட்டுள்ளது. மேலும், பார்வையாளர்கள் கண்ணியத்தையும் அமைதியையும் பின்பற்ற வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.