அல்லாஹு அக்பர் அல்லாஹ்...மசூதியில் பாட்டுபாடி வழிபாடு நடத்திய ஐயப்ப பக்தர்கள்
ஐயப்பன் கோவிலுக்கு மாலை அணிந்து சென்ற பக்தர்கள் வாவர் மசூதியில் பாடல் பாடிய வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
குவியும் ஐயப்ப பக்தர்கள்
சபரிமலை ஐயப்பன் கோவில் மண்டல பூஜைகளுக்காக நடை திறக்கப்பட்டுள்ளது. டிசம்பர் 27 ஆம் தேதி வரை மொத்தம் 41 மண்டல பூஜை நடைபெறும்.
இதனையொட்டி சிறுவழி, பெருவழி என அனைத்து பாதைகளின் வழியாக பக்தர்கள் ஐயப்பனை தரிசித்து வருகின்றனர்.பக்தர்கள் அதிகளவில் வரக்கூடும் என்பதால் தேவசம்போர்டு அனைத்து ஏற்பாடுகளையும் செய்துள்ளது.
ஐயப்பனுக்கு மாலை அணிந்து விரதமிருக்கும் பக்தர்கள், சபரிமலை செல்லும் போது அவ்வழியே இருக்கும் வாவர் மசூதிக்கும் சென்று வழிபாடு நடத்துவர்.
வைரலாகி வரும் வீடியோ
இந்த ஆண்டு அதிகளவிலான பக்தர்கள் குவிந்து வருவதால் அனைத்து ஏற்பாடுகளையும் மசூதி நிர்வாகம் செய்து கொடுத்துள்ளனர்.
இந்த நிலையில் வாவர் மசூதியில் பக்தர்கள் குழுவாக பாட்டுப்பாடி வழிபடும் வீடியோ ஒன்று இணையத்தில் வைராகி வருகிறது.
அந்த வீடியோவில் நுாற்றுக்கும் மேற்பட்ட ஐயப்ப பக்தர்கள் மாலை அணிந்து வாவல் மசூதியில் அல்லாஹு அக்பர் அல்லாஹ் என பாடலை தொடங்கினர்.
லாயிலாஹ இல்லில்லாஹ் வாவர் முஹம்மது ரசூலுல்லாஹ் என பாட்டு பாடுகின்றனர். இந்த வீடியோவை பார்க்கும் இணையவாசிகள் மத ஒற்றுமைக்கு இதுவே சிறந்த எடுத்துக்காட்டு என தெரிவித்து வருகின்றனர்.
லா இலாஹ இல்லல்லாஹ்... ??
— Er.NithanKrish B.E., (@iam_nithankrish) November 18, 2022
~செத்து கித்து போயிறாதிங்கடா சங்கீஸ் ? #கார்த்திகை #சபரிமலை pic.twitter.com/n6GkMZZVoa