ஐஏஎஸ் பயிற்சி மையத்தில் திடீர் வெள்ளம்; 3 பேர் பலி - நள்ளிரவில் நடந்தது என்ன?

Rahul Gandhi Delhi
By Karthikraja Jul 28, 2024 09:07 AM GMT
Report

டெல்லியில் ஐஏஎஸ் பயிற்சி மையத்தில் வெள்ளம் புகுந்ததில் 3 பேர் உயிரிழந்துள்ளனர்.

யு.பி.எஸ்.சி பயிற்சி மையம்

கடந்த சில நாட்களாக டெல்லியில் கனமழை பெய்து வருகிறது. இதனால் பல்வேறு இடங்களில் நீர் தேங்கி பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. 

ஐஏஎஸ் பயிற்சி மையத்தில் திடீர் வெள்ளம்; 3 பேர் பலி - நள்ளிரவில் நடந்தது என்ன? | Delhi Ias Coaching Centre Flood 3 Students Death

இந்நிலையில் டெல்லி ராஜேந்திர நகரில் உள்ள பிரபல தனியார் யு.பி.எஸ்.சி பயிற்சி மையத்தின் தரைக்கு கீழ்த்தளத்தில் (பேஸ்மெண்ட்) நீர் புகுந்துள்ளது. இது தொடர்பாக இரவு 7 மணி அளவில் டெல்லி தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

கர்நாடகா நிலச்சரிவு; உயிருடன் புதைந்த 8 பேர் - சிக்கிய தமிழர்களின் நிலை என்ன?

கர்நாடகா நிலச்சரிவு; உயிருடன் புதைந்த 8 பேர் - சிக்கிய தமிழர்களின் நிலை என்ன?

3 பேர் பலி

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தேசிய பேரிடர் மீட்பு படையினர் பயிற்சி மையத்தில் புகுந்த நீரை மோட்டர் மூலம் உறிஞ்சு எடுக்கும் பணியில் ஈடுபட்டனர்.வெள்ளம் சூழும் முன்பே அங்கிருந்த 30 க்கு மேற்பட்ட மாணவர்கள் வெளியேறி உள்ளனர். 3 பேர் உள்ளே சிக்கியிருந்தனர். கிட்டத்தட்ட 10-12 அடி தண்ணீர் சூழ்ந்ததால் மீட்பு பணியில் சிக்கல் ஏற்பட்டது. 

தொடர் முயற்சிக்கு பின் 2 மாணவி ஒரு மாணவர் என 3 பேரின் உடல் சடலமாக மீட்கப்பட்டது. இதையடுத்து சக மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதி சிறிது நேரத்திற்கு போர்க்களம் போல் காட்சி அளித்தது. சம்பவ இடத்திற்கு விரைந்த துணை காவல் ஆணையர் ஹர்சவர்தன், போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களின் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார்.

இது குறித்து துணை காவல் ஆணையர் ஹர்சவர்தன் கூறுகையில், சம்பவ தொடர்பாக கிரிமினல் வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது. பயிற்சி மையத்தின் உரிமையாளர் மற்றும் ஒருங்கிணைப்பாளர் கைது செய்யப்பட்டு அவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.

ராகுல் காந்தி

இது குறித்து பேசிய டெல்லி பொதுப்பணி துறை அமைச்சர் "டெல்லியில் பெய்த கனமழையால் ராஜேந்திர நகரில் உள்ள பயிற்சி மையத்தை நீர் சூழ்ந்துள்ளது. டெல்லி மேயர் மற்றும் உள்ளூர் எம்எல்ஏ சம்பவ இடத்தில் இருக்கிறார்கள். இந்த விவகாரத்தில் குற்றவாளிகள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது மிகக் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். ஏற்கனவே இந்த விவகாரத்தில் மாஜிஸ்திரேட் விசாரணை தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 24 மணி நேரத்தில் அறிக்கை சமர்ப்பிக்கவும் அறிவுறுத்தி இருக்கிறேன்" என்றார்.

இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள, எதிர்கட்சி தலைவர் ராகுல் காந்தி டெல்லி தனியார் ஐஏஎஸ் பயிற்சி மையத்தில் 3 மாணவர்கள் உயிரிழப்புக்கு நிர்வாக உட்கட்டமைப்பின் ஒட்டுமொத்த தோல்வியே காரணமாகும் என தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். 

டெல்லியில் பேஸ்மெண்டில் இதுபோன்ற பயிற்சி மையங்கள் இயங்குவது விதி மீறல் என்பதால் அவை மீது நடவடிக்கை எடுக்க டெல்லி மேயர் ஷெல்லி ஓபராய் உத்தரவிட்டுள்ளார்.