பெங்களூரைத் தொடர்ந்து இங்கேயும் தலைவிரித்தாடும் தண்ணீர் பஞ்சம் - வீணாக்கினால் ரூ.2 ஆயிரம் அபராதம்!
தண்ணீரை வீணாக்கினால் ரூ.2 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என அரசு அறிவித்துள்ளது.
தண்ணீர் பஞ்சம்
ஹரியாணாவில் இருந்து டெல்லி வழியாக ஓடும் யமுனை நதியிலிருந்து குடிநீர் எடுக்கப்பட்டு மக்களுக்கு விநியோகிக்கப்படுகிறது.
இந்நிலையில், டெல்லியில் கடந்த சில நாட்களாக தண்ணீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. இதற்கு காரணமாக ஹரியாணாவில் ஆளும் பாஜக அரசு, டெல்லிக்கு வழங்க வேண்டிய தண்ணீரை குறைத்து விட்டது தான் எனக் கூறப்படுகிறது.
அரசு நடவடிக்கை
ஒரு நாளைக்கு 2 முறை குடிநீர் விநியோகிக்கப்பட்டு வந்த நிலையில், ஒரு நாளைக்கு ஒருமுறை மட்டுமே குடிநீர் விநியோகிக்கப்படும் என மாநில பொதுப்பணித்துறை அமைச்சர் அதிஷி அறிவித்துள்ளார்.
மேலும், குடிநீரை வீணாக்கினால் அவர்களுக்கு 2000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, பெங்களூருவில் கடுமையான குடிநீர் பஞ்சம் ஏற்பட்டு இதே போன்ற அபராத நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது குறிப்பிடத்தக்கது.