தலைவிரித்தாடும் தண்ணீர் பஞ்சம் - உதவிக்கரம் நீட்டிய சீனா !
குடிநீர் பஞ்சத்தால் அல்லாடும் மாலத்தீவுக்கு சீனா உதவிக்கரம் நீட்டியுள்ளது.
குடிநீர் பஞ்சம்
2014ல் மாலத்தீவு குடிநீர் நிறுவனத்தில் ஏற்பட்ட விபத்தின்போது கடும் குடிநீர் பஞ்சம் ஏற்பட்டது. அந்த சமயங்களில் மாலத்தீவின் வேண்டுதலின்படி, இந்தியா பல்வேறு தவணைகளில் குடிநீர் அனுப்பியது.
இந்நிலையில், அங்கு நிலவும் தண்ணீர் பற்றாக்குறையை போக்க, திபெத்தில் உள்ள பனிப்பாறைகளில் இருந்து பெறப்படும் 1,500 டன் குடிநீரை சீன அரசு நன்கொடையாக வழங்கியுள்ளது.
சீனா உதவி
திபெத் தன்னாட்சிப் பகுதி, உயர்தர பிரீமியம் பிராண்டு தண்ணீரை தயாரிப்பதில் புகழ்பெற்றது. சீனா கொண்டு வந்த நீர், அதன் தூய்மை, தெளிவு மற்றும் தாது செழுமைக்காக அறியப்பட்ட பனிப்பாறைப் பகுதிகளில் இருந்து பெறப்படும் உறைந்த நீரில் இருந்து தயாரிக்கப்படுகிறது.
இந்த உதவி வரலாற்று ரீதியாக நகர்ப்புற மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கு முக்கிய பங்காக பார்க்கப்படுகிறது. மாலத்தீவுகள், அதன் 26 பவளப்பாறைகள் மற்றும் 1,192 தீவுகள் பெரும்பாலும் பவளப்பாறைகள் மற்றும் மணல் திட்டுகளால் ஆனது.
நிலத்தடி நீர் மற்றும் நன்னீரின் தீவிர பற்றாக்குறையை எதிர்கொள்கிறது. தொடர்ந்து காலநிலை மாற்றத்தால் அதிகரித்து வருகிறது.