இந்திய விமானத்தை பயன்படுத்த அனுமதி மறுத்த மாலத்தீவு அதிபர் - பரிதாபமாக உயிரிழந்த சிறுவன்!

India Maldives Death World
By Jiyath Jan 21, 2024 06:38 AM GMT
Report

இந்திய விமானத்தை பயன்படுத்த மாலத்தீவு அதிபர் முகமது முய்சு அனுமதி மறுத்ததால் சிறுவன் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சிறுவன் 

மாலத்தீவு அதிபர் முகமது முய்சு இந்தியாவுக்கு எதிரான நிலைப்பாட்டை கொண்டுள்ளதால், இருநாடுகளின் உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது.

இந்திய விமானத்தை பயன்படுத்த அனுமதி மறுத்த மாலத்தீவு அதிபர் - பரிதாபமாக உயிரிழந்த சிறுவன்! | Maldivian Boy Dies As Prez Muizzu Denies Approval

மாலத்தீவிலுள்ள 88 இந்திய படை வீரர்களை மார்ச் 15-ம் தேதிக்குள் திரும்பப்பெரும்படியும் மாலத்தீவு அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது. முன்னதாக இந்திய அரசு டிரோனியர் ரக விமானத்தை மாலத்தீவுக்கு வழங்கியுள்ளது. மாலத்தீவில் மருத்துவ மற்றும் பிற பயன்பாட்டிற்காக பயன்படுத்தப்பட்டு வரும் இந்த விமானத்தை இந்திய வீரர்கள் இயக்கி வருகின்றனர். இந்நிலையில் இந்திய விமானத்தை பயன்படுத்த அதிபர் முகமது முய்சு அனுமதி மறுத்ததால் உடல்நலம் பாதிக்கப்பட்ட சிறுவன் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மாலத்தீவின் கபி அலிப் விலிங்இல்ஸ் என்ற பகுதியை சேர்ந்த 14 வயது சிறுவன் மூளையில் கட்டி இருந்ததால் அதற்காக சிகிச்சை பெற்று வந்துள்ளார். கடந்த வியாழக்கிழமை அந்த சிறுவனுக்கு வலிப்பு ஏற்பட்டதால், உடனடியாக மேல்சிகிச்சைக்காக தலைநகர் மாலியில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்ல மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

உயிரிழப்பு 

இதனையடுத்து சிறுவனை அழைத்துச் செல்ல இந்தியா வழங்கிய டிரோனியர் விமானத்தை பயன்படுத்த அதிகாரிகளிடம் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

இந்திய விமானத்தை பயன்படுத்த அனுமதி மறுத்த மாலத்தீவு அதிபர் - பரிதாபமாக உயிரிழந்த சிறுவன்! | Maldivian Boy Dies As Prez Muizzu Denies Approval

விமானத்தை பயன்படுத்த அதிபர் முய்சு ஒப்புதல் அளிக்க வேண்டும் என்பதால் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. ஆனால் அதிபர் ஒப்புதல் அளிக்கவில்லை என தகவல் வெளியாகியுள்ளது. பின்னர், 16 நேரத்திற்கு பின் சிறுவன் விமானம் மூலம் மாலிக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி சிறுவன் உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், அதிபர் முய்சு அனுமதி அளிக்காததால் சிறுவன் உயிரிழந்ததாக மாலத்தீவு உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஆனால் விமானத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாகவே சிறுவனை உடனடியாக மாலிக்கு கொண்டு வர முடியவில்லை என விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.