வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்ட டெல்லி முதல்வர் அதிஷி? - இல்லத்திற்கு சீல் வைக்கப்பட்டதால் பரபரப்பு
டெல்லி முதல்வரின் அதிகாரபூர்வ இல்லத்திற்கு சீல் வைக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லி முதல்வர்
டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ராஜினாமா செய்தியதையடுத்து ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவர் அதிஷி டெல்லியின் புதிய முதல்வராக பொறுப்பேற்றார்.
இந்நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன், டெல்லி முதல்வருக்கான அதிகாரபூர்வ இல்லமான சிவில் லைனில் உள்ள பிளாக்ஸ்டாப்ஸ் ரோட்டில் உள்ள பங்களாவில் குடியேறினார்.
இல்லத்திற்கு சீல்
கடந்த 9 வருடங்களாக இந்த வீட்டில் வசித்து வந்த அரவிந்த் கெஜ்ரிவால் பதவியை ராஜினாமா செய்ததையடுத்து இந்த வீட்டை காலி செய்த நிலையில் முதல்வர் அதிஷி இங்கு குடியேறினார். அவரது உடைமைகள் உள்பட அனைத்து பொருட்களும் கொண்டு வந்து வைக்கப்பட்டது.
இந்நிலையில் இன்று திடீரென்று அந்த பங்களாவிற்கு வந்த பொதுப்பணித்துறை அதிகாரிகள்அங்கு இருந்த அதிஷியின் உடைமைகளை அகற்றி வெளியே வைத்துவிட்டு சீல் வைத்துள்ளனர். முதல்வரின் அதிகாரபூர்வ இல்லத்திற்கு சீல் வைக்கப்பட்ட சம்பவம் டெல்லியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
முக்கிய பாஜக தலைவருக்கு இந்த பங்களாவை ஒதுக்கீடு செய்ய முடிவு செய்து டெல்லி துணை நிலை ஆளுநர் விகே சக்சேனா உத்தரவின்பேரில்தான் அந்த இல்லத்தில் இருந்த பொருட்கள் அகற்றப்பட்டுள்ளது'' என ஆம் ஆத்மி தரப்பில் குற்றஞ்சாட்டியுள்ளனர்.