வெறித்தனமான Fanboy சிறுவன்...?? Exam'ல "தல" என பதில்..? ஷாக் கொடுத்த ஸ்கூல் ..?
கணிதத் தேர்வில் விடைத்தாளில் உள்ள ஒவ்வொரு கேள்விக்கும் ‘தல’ என்று பதில் எழுதிய டெல்லி சிறுவன் பள்ளியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
தல என பதில்
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனிக்கு மரியாதை செலுத்தும் வகையில் கஜோதர் என்ற சிறுவன் ‘தல’ என்று எழுதினார் என்பது தெரிய வந்தது. சில நாட்களுக்கு முன், கணிதம் தேர்வில் பங்கேற்றார்.
அவர் தனது பதில் தாளில் உள்ள ஒவ்வொரு கேள்விக்கும் பதிலளிக்கும் விதமாக ‘தல’ என்று எழுதியிருக்கின்றார். ‘தல’ என்பது மக்களால் தோனியை புகழும் ஒரு சொல் என்பது சொல்லி தெரியவேண்டியது இல்லை.
இதற்கிடையில், பள்ளி ஆசியர் ஒருவர் இது குறித்து கூறுகையில், எந்தவொரு புகழ்பெற்ற ஆளுமையின் ரசிகராக இருப்பதில் தவறில்லை என்றாலும், கஜோதர் செய்தது மோசமான நடத்தையின் கீழ் வரும் என்றும் அவர் குற்றம்சாட்டி இருக்கின்றார்.
மேலும், மாணவர் கஜோதர் தனது தேர்வை சீரியஸானதாக எடுத்திருக்க வேண்டும் என்றும் இறுதியில் தேர்வில் தோல்வியடைந்து இடைநீக்கம் செய்யப்பட்டார்," என்று அவர் கூறினார்.