டியூஷனில் 4 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை - மக்கள் ஆவேசம்!
டெல்லியில் 4 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை நிகழ்ந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்துள்ளது.
தலைநகரில் கொடூரம்
டெல்லியில் உள்ள பாண்டவ் நகரில் சிறுமி ஒருவர் டியூஷனுக்கு சிறுமி சென்றுள்ளார். அப்போது ஆசிரியர் அங்கு இல்லாத சமயத்தில் 34 வயதுடைய நபர் அந்த சிறுமியை யாரிடமும் சொல்லக்கூடாது என்று மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
உடலில் காயங்களுடன் வீட்டிற்கு அழுத்தப்படி வந்த சிறுமி, தன பெற்றோர்களிடம் நடந்ததை கூறியுள்ளார். இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த அவர்கள் சிறுமியை உடனடியாக மருத்துவமனையில் அனுமதித்தனர்.
மக்கள் ஆவேசம்
ஆனால்,செல்லும் வழியிலே சிறுமியின் உடல்நிலை மோசமாக இருந்திருக்கிறது. இது தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் அளிக்க பெற்றோர்கள் விரைந்தனர் ஆனால், அங்கு இருந்த போலீசார்கள் இந்த விஷயத்தை அலட்சியமாக எடுத்துக்கொண்டதாக தெரியவந்துள்ளது.
இந்நிலையில், சிறுமியின் நிலை கவலைக்கிடமாக இருப்பதை தொடர்ந்து புகைரளிக்க வந்தவர்களிடம் போலீசார் நடந்துகொண்ட செயலை கண்ட மக்கள் ஆவேசமாக திரண்டார்கள்.
மேலும், கொந்தளித்த மக்கள் வீதியில் இறங்கி போராட்டத்தை மேற்கொண்டனர். கார்கள், இரு சக்கர வாகனங்கள் என அனைத்தையும் அடித்து சேதப்படுத்தினர்.
இந்த சம்பவத்தில் ஒருவர் கைது செய்திருப்பதாக போலீஸார் தெரிவித்தும், உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பொதுமக்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.