ஊர் திருவிழாவில் சுவாரசியம்..அம்மனுக்கு ஆதார் அட்டையை வடிவமைத்த பக்தர்கள்!

Tamil nadu Viral Photos Dindigul
By Swetha Jun 03, 2024 10:15 AM GMT
Report

கோயில் திருவிழா பேனரில் தெய்வங்களின் ஆதார் அட்டையை போல் இடம்பெற்றிந்தது.

ஊர் திருவிழா 

திண்டுக்கல் மாவட்டம் கொடைரோடு அருகே பொம்மணம்பட்டி கிராமம் உள்ளது. இங்கு மிகவும் பழமை வாய்நத காளியம்மன், பகவதியம்மன் கோவில் அமைந்திருக்கிறது. இந்த கோவில் திருவிழா கடந்த மாதம் கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது.

ஊர் திருவிழாவில் சுவாரசியம்..அம்மனுக்கு ஆதார் அட்டையை வடிவமைத்த பக்தர்கள்! | Deitys Aadhaar Card In Banner

இதனையொட்டி பக்தர்கள், மாவிளக்கு, தீச்சட்டி, பால்குடம் எடுத்தல், பொங்கல் வைத்தல், கிடா வெட்டுதல் உள்ளிட்ட நேர்த்திக்கடன்களை செலுத்தி வழிப்பட்டனர். இந்த திருவிழா அம்மன் பூஞ்சோலை சென்று அடையும் நிகழ்ச்சியுடன் நிறைவு பெறுகிறது. பொதுவாகவே விழாக்களுக்கு பேனர்களை வைத்து அலங்கரிப்பது வழக்கமாக இருந்து வருகிறது.

கோவில் திருவிழா நடத்த காவல்துறை அனுமதி தேவையில்லை :  மதுரை ஐகோர்ட்டு உத்தரவு

கோவில் திருவிழா நடத்த காவல்துறை அனுமதி தேவையில்லை : மதுரை ஐகோர்ட்டு உத்தரவு

ஆதார் அட்டை

இன்றளவிலும் காண்போரை கவரும் வகையில் பல்வேறு வாசகங்கள் மற்றும் தோற்றத்தில் பேனர்கள் வைக்கப்படுகிறது. அந்த வகையில், பொம்மணம்பட்டியில் நடந்த காளியம்மன் கோவில் திருவிழாவையொட்டி பக்தர்கள் சார்பில் பல்வேறு பேனர்கள் வைக்கப்பட்டிருந்தன.

ஊர் திருவிழாவில் சுவாரசியம்..அம்மனுக்கு ஆதார் அட்டையை வடிவமைத்த பக்தர்கள்! | Deitys Aadhaar Card In Banner

அதில் ஒரு பேனர், ஆதார் அட்டை போல் வடிவமைக்கப்பட்டியிருந்தது. அந்த பேனரில் முத்தாலம்மன், காளியம்மன், பகவதியம்மன், கன்னிமார், நாகம்மாள், வெற்றி விநாயகர் ஆகிய தெய்வங்களின் படங்கள் இருந்தன. மேலும் அந்த தெய்வங்களின் பிறந்த தேதியில் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்ட வருடம் குறிப்பிடப்பட்டு இருந்தது.

இதுமட்டுமல்லாமல், வட்டம், மாவட்டம், ஆதார் எண், இணையதள முகவரி, பார்கோடு மற்றும் ஆதாரம் எங்க ஊரு, எங்க ராஜ்ஜியம் என்று அச்சிடப்பட்டிருந்தது. இது விழாவுக்கு வந்த அனைத்து பக்தர்களின் கவனத்தையும் ஈர்த்தது.