சீமானுக்கு 2 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை? வெளியான பரபரப்பு தகவல்!
நாம் தமிழர் கட்சித் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
சீமான்
விக்கிரவாண்டி சட்டப்பேரவை இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் பேசிய நாதக கட்சியைச் சேர்ந்த சாட்டை துரைமுருகன் திமுக தலைவரும், முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி குறித்து அவதூறாகப் பாடல் ஒன்றைப் பாடினார். இதுகுறித்து திருச்சி மாவட்டத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு சாட்டை துரைமுருகன் சாட்டை கைது செய்யப்பட்டார்.
இதனைத் தொடர்ந்து அவருக்குச் சொந்தமான இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து ஆக.4-ம் தேதி நடந்த பொதுக் கூட்டத்தில் பேசிய சீமான் சாட்டை துரைமுருகன் பாடிய பாடல் குறித்துப் பேசினார். நானும் அந்த பாடலை பாடுகிறேன்.
காவல்துறை என்ன நடவடிக்கை எடுக்கிறது என்று பார்க்கிறேன் எனச் சவால் விடுத்துப் பாடல் பாடினார். அப்போது அவதூறான வார்த்தைகளைப் பயன்படுத்தினார். இதனை தொடர்ந்து கரூரைச் சேர்ந்த வழக்கறிஞர் தமிழ் ராஜேந்திரன் என்பவர் ஆக.5ம் தேதி கரூர் மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்தார்.
வழக்குப்பதிவு
புகாரின் அடிப்படையில் அவதூறாகப் பேசுதல், இழிவுபடுத்தும் நோக்கத்தில் பேசி இணைய தளத்தில் வெளியிடுதல் உள்ளிட்ட இரு பிரிவுகளின் கீழ் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்தனர்.இந்த வழக்கு விசாரணையை தாந்தோணிமலை காவல் நிலையம் இந்த வழக்கை எடுத்து விசாரிக்கக் கரூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்த வழக்கில் நாம் தமிழர் கட்சித் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு அபராதத்துடன் 2 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை வழங்க வாய்ப்புள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.