தீபக்ஹூடா ஜெர்சியால் குழப்பத்தில் ரசிகர்கள்.... என்னாச்சு?
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான போட்டியில் தீபக் ஹூடா அணிந்து ஆடிய ஜெர்சி ட்விட்டரில் பேசு பொருளாகியுள்ளது.
தீபக் ஹூடா
இந்திய கிரிக்கெட் அணியின் இளம் ஆட்டக்காரர் தீபக்ஹூடா. வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான போட்டியில் சுழற்பந்துவீச்சில் தெறிக்கவிட்டார். அதில் அவர் அணிந்திருந்த ஜெர்சிதான் தற்போது சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகி உள்ளது.
ஒவ்வொரு வீரரும் தான் பெயர் பொறித்த ஜெர்சியையும், அதன்கீழ் அவர்களுக்கான எண்ணையும் அணிந்திருப்பது வழக்கமான ஒன்று ஆகும். இந்த போட்டியில் தீபக் ஹூடா அணிந்திருந்த ஜெர்சியின் பின்புறம் இருந்த பெயர் டேப் கொண்டு மறைக்கப்பட்டிருந்தது.
ஜெர்சி யாருடையது?
ஆனால், எண் மட்டும் ஜெர்சியில் இருந்தது. 24ம் எண் பொறிக்கப்பட்டிருந்த அந்த ஜெர்சி யாருடையது என்று சமூக வலைதளங்களில் விவாதத்திற்குள்ளாகி உள்ளது. ட்விட்டரில் பலரும் தீபக் ஹூடாவின் இந்த புகைப்படத்தை பகிர்ந்து இந்த ஜெர்சி யாருடையது? என்று கேள்வி எழுப்பியிருந்தனர்.
Caught and bowled on the first ball! Good spin attack from @HoodaOnFire dismissing #KyleMayers.
— FanCode (@FanCode) July 24, 2022
Watch all the action from the India tour of West Indies LIVE, only on #FanCode ? https://t.co/RCdQk12YsM@BCCI @windiescricket #WIvIND #INDvsWIonFanCode #INDvsWI pic.twitter.com/EKWvcIyKrs
அதற்கு சிலர் குருணல் பாண்ட்யா என்றும், சிலர் பிரசித் கிருஷ்ணா என்றும் பதிலளித்திருந்தனர். முன்னதாக, இந்திய அணிக்காக ஆடும்போது குருணல் பாண்ட்யாவும், பிரசித் கிருஷ்ணாவும் 24ம் எண் கொண்ட ஜெர்சியை அணிந்து ஆடியுள்ளனர்.
ரசிகர்கள் குழப்பம்
இந்த போட்டியில் தீபக் ஹூடா அணிந்து ஆடிய ஜெர்சி பிரசித் கிருஷ்ணாவின் ஜெர்சி ஆகும். இதனால், வழக்கமாக தீபக் ஹூடா அணிந்து ஆடும் ஜெர்சிக்கு என்ன ஆனது? என்று பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
24ம் எண் கொண்ட ஜெர்சியை இந்திய அணிக்காக தற்போதைய பி.சி.சி.ஐ. தலைவரும் இந்திய அணியின் முன்னாள் கேப்டனுமாகிய கங்குலியும் அணிந்து ஆடியுள்ளது குறிப்பிடத்தக்கது.