சிஎஸ்கே என்னை வாங்காததற்கு காரணம் இதுதான் - மனம் திறந்த தீபக் சஹார்
சிஎஸ்கே தன்னை ஏலத்தில் எடுக்காதது குறித்து தீபக் சஹார் பேசியுள்ளார்.
ஐபிஎல் ஏலம்
2025 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் கடந்த நவம்பர் 24, 25ஆம் தேதிகளில் சவுதி அரேபியாவின் ஜெட்டா நகரில் நடைபெற்றது.
இதில் அதிகபட்சமாக ரிஷப் பன்டை, 27 கோடி ரூபாய்க்கு லக்னோ அணி வாங்கியது. 13 வயதான வைபவ் சூர்யவன்ஷியை ரூ.1.10 கோடிக்கு ராஜஸ்தான் அணி வாங்கியுள்ளது.
தீபக் சஹார்
தீபக் சஹார் 2வது நாள் ஏலத்தில் வந்தார். அவரது அடிப்படை விலையை 2 கோடியாக நிர்ணயித்திருந்தார். மும்பை, பஞ்சாப், சென்னை அணிகள் தீபக் சாஹரை ஏலம் கேட்டன. பஞ்சாப் அணி ஏழரை கோடிக்கு கேட்ட பொழுது சென்னை அணி ஒன்பது கோடிக்கு கேட்டது.
அதையடுத்து மும்பை அணி ஒன்பது கோடி 25 லட்சம் ரூபாய்க்கு எடுத்தது. தீபக் சஹார் 2019 ஆம் ஆண்டு முதல் சென்னை அணிக்காக ஆடி வருகிறார். சென்னைஅணியின் முன்னணி பந்து வீச்சாளராக ஜொலித்து வந்த அவரை ஏலத்தில் எடுக்காதது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியது.
மீண்டும் சிஎஸ்கே
இந்நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் இது குறித்து பேசிய தீபக் சஹார், தோனி ஆரம்பத்திலிருந்தே எனக்கு ஆதரவாக இருக்கிறார். அதனால்தான், சென்னை அணிக்குச் செல்ல விரும்பினேன். ஆனால் 2வது நாள் ஏலத்தில்தான் என் பெயர் வந்தது. அதனால் சென்னை அணி என்னை எடுப்பது கடினம் என புரிந்து கொண்டேன்.
சிஎஸ்கே அணியிடம் 13 கோடி ரூபாய்தான் இருந்தது. அப்படியும் 9 கோடிரூபாய் வரை எனக்காக ஏலம் கேட்டார்கள். அது எனக்கு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. தோனியை ரொம்ப மிஸ் செய்வேன். நிச்சயம் மீண்டும் சிஎஸ்கே அணிக்காக விளையாடுவேன்" என தெரிவித்தார்.