டி20: புவனேஷ்வர் குமாரை நீக்கிவிட்டு இவரை போடுங்கள் - பரபரப்பை கிளப்பிய ஹர்பஜன் சிங்
புவனேஷ்வர் குமார் குறித்து ஹர்பஜன் சிங் கூறியுள்ள கருத்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
டி20 உலககோப்பை
இந்திய கிரிக்கெட் அணி தற்போது தென்னாப்பிரிக்கா அணியுடன் ஒரு நாள் போட்டியை விளையாடி வருகிறது. ஒரு நாள் போட்டியின் முடிவுக்கு பின் டி20 உலககோப்பை ஆஸ்திரேலியாவில் எதிர்வரும் அக்டோபர் 16-ஆம் தேதி துவங்கும் டி20 உலகக் கோப்பை தொடரானது நவம்பர் 13-ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
எனவே, மொத்தம் 16 அணிகள் பங்கேற்கும் இந்த தொடரில் பங்கேற்கிறது. இதனிடையே, இந்திய அணியின் தேர்வு குறித்து பல முன்னாள் வீரர்கள் விமர்சனம் அளித்து வரும் நிலையில், டி20 உலக கோப்பை தொடருக்கான இந்திய அணியில் இருந்து புவனேஸ்வர் குமாரை நீக்க வேண்டும் என்று முன்னாள் கிரிக்கெட் வீரர் ஹர்பஜனும் கோரிக்கை விடுத்துள்ளார்.
ஹர்பஜன் சிங் பகீர்
அவர், வெளியிட்டுள்ள கருத்தில் புவனேஸ்வர் குமார் அனுபவம் வாய்ந்த வீரராக இருந்தாலும், சமீப நாட்களாக அவர் 19வது ஓவரில் அதிக ரன்களை விட்டுத் தருகிறார். 15 ரன்களுக்கு மேல் கொடுத்தால் அது ஆட்டத்தின் போக்கையே மாற்றிவிடும்.
எனவே இதனால் புவனேஸ்வர் குமாருக்கு பதிலாக நான் தீபக்சாகரை தான் அணியில் சேர்க்கவேண்டும் என கேட்டுள்ளார். மேலும், தீபக் சாகர் மட்டும் தான் தற்போது இருக்கும் இந்திய பந்துவீச்சாளர்களில் புதிய பந்தில் நன்றாக ஸ்விங் செய்கிறார்.
இன்சுவிங், அவுட்சிங் என இரண்டிலும் விக்கெட்டுகளை பவர் பிளேவில் விக்கெட்டுகளை இரண்டும் அல்லது மூன்று பெற்று தருவார் என கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.