“பந்துவீச்சாளர் ஹர்திக் பாண்டியா மீண்டும் வந்துவிட்டார்” - ஹர்பஜன் சிங் புகழாரம்..!
ஐபிஎல் கிரிக்கெட் இறுதி போட்டியில் 3 விக்கெட்டுகளை வீழ்த்தி ஹர்திக் பாண்டியா அபாரமாக பந்து வீசி அசத்தினார்.
ராஜஸ்தான் அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி ஐபிஎல் கோப்பையை கைப்பற்றியது.
குஜராத் அணி ஹர்திக் பாண்ட்யா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணியும், சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதின.
குஜராத் மாநிலம் அகமதாபாத் நகரில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் இரவு 8 மணியளவில் தொடங்கியது.
இந்த போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார்.
இதில் ராஜஸ்தான் அணி முதலில் பேட்டி செய்தது 20 ஓவர் முடிவில் 130 ரன்கள் எடுத்தது. ராஜஸ்தான் அணிக்கு 9வது ஓவரில் பந்துவீச வந்தார் கேப்டன் ஹர்திக் பாண்டியா.
தான் வீசிய முதல் ஓவரின் 2வது பந்தில் கேப்டன் சஞ்சு சாம்சன் விக்கெட்டை வீழ்த்தி அதிர வைத்தார் கேப்டன் ஹர்திக்.
அந்த முதல் ஓவரில் வெறும் ஒரு ரன்னை மட்டுமே விட்டுக் கொடுத்தார் ஹர்திக். அவர் வீசிய 2வது ஓவரில் விக்கெட் விழவில்லை என்றாலும் 4 ரன்களை மட்டுமே ராஜஸ்தான் அணியால் எடுக்க முடிந்தது.
அடுத்து அவர் வீசிய 3வது ஓவரில் முதல் பந்திலேயே ராஜஸ்தானுக்கு பேரதிர்ச்சி காத்திருந்தது. அதிரடி வீரர் பட்லரின் விக்கெட்டை அசால்ட்டாக வீழ்த்தினார் ஹர்திக் பாண்டியா.
ராஜஸ்தான் பேட்டிங் ஆர்டரின் மொத்த நம்பிக்கையும் தூள் தூளான தருணம் அது. அந்த 3வது ஓவரிலும் 3 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்தார்.
அவர் வீசிய 4வது ஓவரில் 2 பவுண்டரிகளை விளாசிய ஹெட்மேயரை அந்த ஓவரின் கடைசிப் பந்தில் வீழ்த்தி கணக்கை நேர் செய்துவிட்டார் ஹர்திக்.
மொத்தமாக 17 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்து 3 பெரும் தலைகளின் விக்கெட்டுகளை சாய்த்து அசத்தினார் ஹர்திக்.
இந்திய அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங் மற்றும் முன்னாள் வேகபந்து வீச்சாளர் வினய் குமார் ஆகியோரும் ஹர்திக் பாண்டியாவை பாராட்டியுள்ளனர்.
“பந்துவீச்சாளர் ஹர்திக் பாண்டியா மீண்டும் வந்துவிட்டார்” என்று ஹர்பஜன் சிங் தனது ட்விட்டர் பக்கத்தில் பாராட்டியுள்ளார்.
புதிய அணிகாக இந்த ஆண்டு ஐபிஎல் போட்டியில் விளையாடி சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றுள்ளதை அனைவரும் பாராட்டி வருகின்றனர்.
HARDIK the BOWLER is back .. what a spell captain ??@hardikpandya7 @gujarat_titans
— Harbhajan Turbanator (@harbhajan_singh) May 29, 2022