பற்றி எரியும் மணிப்பூர்; ஒலிக்கும் மரண ஓலம் - பதற்றமான மாநிலமாக அறிவிப்பு!
மணிப்பூர் மாநிலம் பதற்றம் நிறைந்த மாநிலமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
வெடிக்கும் வன்முறை
மணிப்பூரில் முதல்வர் பிரேன்சிங் தலைமையில் பாஜக ஆட்சி நடைபெறுகிறது. அந்த மாநிலத்தின் மக்கள் தொகையில் சுமார் 53 சதவீதம் பேர் மைதேயி சமூகத்தையும் மீதமுள்ளவர்கள் குகி, நாகா உள்ளிட்ட சமூகத்தையும் சேர்ந்தவர்கள் ஆவர்.
மைதேயி சமூகத்தினருக்கு பழங்குடியினர் அந்தஸ்து வழங்க மாநில அரசுக்கு பரிந்துரை செய்தது. இதனால் தங்களது உரிமைகள் முழுமையாகப் பறிக்கப்படும் என்று குகி, நாகா சமூகத்தினர் கடந்த மே 3-ம் தேதி போராட்டம் தொடங்கினர்.
பதற்றமான மாநிலம்
170-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். ஆயிரக் கணக்கானோர் காயமடைந்தனர். பல்லாயிரக் கணக்கான மக்கள் தங்கள் வசிப்பிடங்கள், வாழ்வாதாரங்களை இழந்து தவிக்கின்றனர்.
இந்தச் சூழலில் பல மாதங்களுக்குப் பின்னர் இணைய சேவை முடக்கம் நீக்கப்பட்டதும் வைரலான இரண்டு மாணவர்களின் சடலங்களின் புகைப்படம் பதற்றத்தைத் தூண்டும் வகையில் அமைந்தது.
இந்நிலையில் மத்திய உள்துறை அமைச்சகம், மணிப்பூரில் உள்ள 19 காவல் நிலைய எல்லைகளுக்கு உட்பட்ட பகுதிகள் தவிர்த்து, மற்ற பகுதிகள் பதற்றமான பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளது.