வீரப்பன் நாயகனா, வில்லனா? சமூக வலைதளங்களில் அனல் பறக்கும் விவாதம்!

Netflix
By Sumathi Aug 07, 2023 05:16 AM GMT
Report

வீரப்பன் குறித்த ஆவணப்படம் வெளியாகி பேசுபொருளாக மாறியுள்ளது.

வீரப்பன்

20 வருடங்கள் காவல்துறையால் தேடப்பட்ட குற்றவாளி வீரப்பன் எப்படிக் கொல்லப்பட்டார் என்ற விஷயத்தை ஆவணப்படமாக்கியுள்ளார் (‘தி ஹன்ட் ஃபார் வீரப்பன்’)செல்வமணி செல்வராஜ். மொத்தம் 120 பேர், அதில் 44 வனத்துறை மற்றும்

வீரப்பன் நாயகனா, வில்லனா? சமூக வலைதளங்களில் அனல் பறக்கும் விவாதம்! | Debate On Social Media Behalf Of Veerapan Viral

காவல்துறை அதிகாரிகளைக் கொலை செய்ததோடு மட்டும் அல்லாமல் ஆயிரக்கணக்கான யானைகளையும் லட்சக்கணக்கான சந்தன மரங்களையும் வெட்டி சமூக மற்றும் பொருளாதார இழப்புக்குக் காரணமானவரின் எழுச்சி மற்றும் வீழ்ச்சியை காட்சிப்படுத்தியுள்ளனர்.

வலுக்கும் விமர்சனங்கள் 

குற்ற நடவடிக்கைகளில் ஈடுபடத் தொடங்கியது முதல் போலீசாரால் அவர் சுட்டுக் கொலை செய்யப்பட்டது வரை நடந்த சம்பவங்களை வீரப்பனின் மனைவி முத்துலட்சுமி, போலீஸ் அதிகாரிகள், எல்லையோர கிராம மக்கள் ஆகியோரின் பார்வையில் இத்தொடர் பதிவு செய்கிறது.

வீரப்பன் நாயகனா, வில்லனா? சமூக வலைதளங்களில் அனல் பறக்கும் விவாதம்! | Debate On Social Media Behalf Of Veerapan Viral

அதன்படி, வீரப்பன் வேட்டையாடப்பட்டதை முடிந்த அளவு சுருக்கமாக 168 நிமிடங்களுக்குள் 4 எபிசோடுகளாகத் தந்திருக்கிறார்கள். இந்த நிலையில் இத்தொடர் வெளியானது முதல் சமூக வலைதளங்களில் வீரப்பன் குறித்த விவாதங்கள் சூடுபிடித்துள்ளன.

இது வீரப்பன் வாழ்க்கையைக் கொண்டாடும் ஒரு படைப்பாக இருப்பதாக ஒருபுறமும், என்னதான் இருந்தாலும் வீரப்பன் ஒரு குற்றவாளி என்ற நடுநிலை உணர்வை இன்னுமே கொடுத்திருக்கலாம் என்று மறுபுறமும் விமர்சனங்கள் எழுந்து வருகிறது. மேலும், #Veerappan என்ற ஹேஷ்டேக் ட்விட்டர் சமூக வலைதளத்தில் இந்திய அளவில் ட்ரெண்ட் ஆகியுள்ளது.