ஆம்ஸ்ட்ராங் மனைவிக்கு கொலை மிரட்டல் - எச்சரிக்கை விடுத்த காவல்துறை!
ஆம்ஸ்ட்ராங் மனைவி பொற்கொடிக்கு கொலை மிரட்டல் கடிதம் விடுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரப்பரை ஏற்படுத்தி உள்ளது.
ஆம்ஸ்ட்ராங்
சென்னை பெரம்பூரில் கடந்த ஜூலை மாதம் 5-ஆம் தேதி, பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு தலைவர் ஆம்ஸ்ட்ராங் 6 பேர் கொண்ட கும்பலால் கொடூரமாக வெட்டிக் கொலை செய்யப்பட்டார் . இந்த கொலை சம்பவம் தமிழ்நாட்டை உலுக்கியது.
இதனை தொடர்ந்து குற்றவாளிகளை பிடிக்க தமிழக காவல்துறையினர் தனிப்படை அமைத்து தேடி வந்த நிலையில்,பொன்னை பாபு, வழக்கறிஞர் அருள் உள்ளிட்ட 11 பேரை சிபிசிஐடி காவல்துறையினர் கைது செய்தனர்.
ஆம்ஸ்ட்ராங்கின் கொலைக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்து இந்த வழக்கை சிபிஐ க்கு மாற்ற கோரி போராட்டம் நடத்தினர்.தொடர்ந்து போலீசாரின் விசாரணையில் ஆற்காடு சுரேஷ் படுகொலைக்கு பழிவாங்க, ஆம்ஸ்ட்ராங் கொடூரமாக வெட்டிக் கொலை செய்யப்பட்டதாக வாக்குமூலம் அளித்தனர்.
கொலை மிரட்டல்
தொடர்ந்து ஆம்ஸ்ட்ராங் படுகொலை சம்பவத்தில் கொலையாளிகள் நெட்வொர்க் அதிர வைக்கும் வகையில் நீண்டுகொண்டே செல்வதால் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.இந்த சூழலில் பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளராக ஆம்ஸ்ட்ராங் மனைவி பொற்கொடி நியமிக்கப்பட்டுள்ளார்.
தற்பொழுது அயனாவரத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் ஆம்ஸ்ட்ராங் மனைவி பொற்கொடிக்கு கொலை மிரட்டல் கடிதம் விடுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரப்பரை ஏற்படுத்தி உள்ளது. சதிஷ் என்ற பெயரில் வந்த அந்த கடிதத்தில், பொற்கொடியை கொலை சுதேய்த்து விடுவதாகவும் ,குழந்தையை கடத்திவிடுவதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இதனை தொடர்ந்து, இந்த கடிதம் தொடர்பாக சென்னை காவல் நிலையத்தில் புகார் அளிக்கட்டது. தொடர்ந்து ஆம்ஸ்ட்ராங் குடும்பத்தினருக்கு காவல்துறை பாதுகாப்பு வழங்கியுள்ளனர் .