பிரச்சனை ஆகிடும்...ஆம்ஸ்ட்ராங்கிற்கு அஞ்சலி செலுத்த வந்த சாய்தீனா!! போலீசாருடன் வாக்குவாதம்

Bahujan Samaj Party Tamil nadu Tamil Nadu Police Tamil Actors Murder
By Karthick Jul 06, 2024 10:33 AM GMT
Report

பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் வெட்டி கொல்லப்பட்ட சம்பவம் காலை முதல் தமிழகத்தை உலுக்கி வருகிறது.

வெட்டிக்கொலை

பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவராக இருந்த திரு.ஆம்ஸ்ட்ராங் நேற்று இரவு எப்போதும் போல, வீட்டின் அருகே பேசிக்கொண்டிருந்த போது, 6 பேர் அரிவாள் கத்தியுடன் வந்து சரமாரியாக வெட்டி படுகொலை செய்துள்ளார்கள்.

Bahujan samaj party amstrong death

வடசென்னையில் பெரம்பூரில் நடைபெற்ற இந்த சம்பவம் பெறும் சலசலப்பை உண்டாகியுள்ளது. நாட்டின் எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தியில் துவங்கி, பகுஜன் சமாஜ் கட்சியின் மாயாவதி, மு.க.ஸ்டாலின் என பலரும் கண்டனங்களை பதிவிட்டுள்னர்.

முன்னெச்சரிக்கை நடவடிக்கை வேண்டும் - ஆம்ஸ்ட்ராங் மரணம்! த.வெ.க தலைவர் விஜய் கண்டனம்

முன்னெச்சரிக்கை நடவடிக்கை வேண்டும் - ஆம்ஸ்ட்ராங் மரணம்! த.வெ.க தலைவர் விஜய் கண்டனம்

அவரது உடலுக்கு அரசியல் தலைவர்கள் மரியாதை செலுத்தி வருகிறார்கள். 8 பேர் இந்த சம்பவம் தொடர்பாக கைதான நிலையில், ஆங்காங்கே கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

பிரச்சனை ஆகிடும் 

அவரது உடலுக்கு நடிகர் சாய் தீனா வந்திருந்த போது, ஆதரவாளர்களுக்கும் போலீசாருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது சிலர், யார் என்று தெரியாமல் பேசுறாங்க என்றும் VIP வந்த மட்டும் நிறைய பேரா உள்ளே அனுப்புறாங்க என்றெல்லாம் கோவமாக பேசினார்கள்.

Bahujan samaj party amstrong death actor sai Dheena

போலீசாரிடம் சாய்தீனா இதற்காக மன்னிப்பு கேட்ட நிலையில், தொடர்ந்து அவர் ஆதரவாளர்களிடம் நாளைக்கு வரை நாம நிக்கணும். அரைகுறையா முடிச்ச முடிச்சி அனுப்புங்க என்றால் பிரச்சனை ஆகிடும் என்றும் பேசினார்.