சமையல் நிகழ்ச்சியில் மாட்டிறைச்சி; உயிருடன் எரித்துவிடுவோம்..நடிகையை மிரட்டிய பாஜகவினர்!

BJP Viral Video Bengaluru TV Program
By Swetha Jun 28, 2024 10:11 AM GMT
Report

சமையல் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் நடிகைக்கு கொலை மிரட்டல் விடப்பட்டுள்ளது.

மாட்டிறைச்சி

வங்காளதேச சமையல் நிகழ்ச்சி ஒன்றை பெங்காலி நடிகை சுதிபா சாட்டர்ஜி தொகுத்து வழங்கி வருகிறார்.அந்நிகழ்ச்சியில் மாட்டிறைச்சி உணவைத் தயாரித்துக் கொண்டிருந்த பங்கேற்பாளருடன் சுதீபா உரையாடிய வீடியோக்கள் சமூக ஊடகங்களில் வைரலாக பரவியது.

சமையல் நிகழ்ச்சியில் மாட்டிறைச்சி; உயிருடன் எரித்துவிடுவோம்..நடிகையை மிரட்டிய பாஜகவினர்! | Death Threats Becuase Beef On Cooking Show

இந்த நிலையில், பலரும் சுதிபா சாட்டர்ஜிக்கு எதிரான கருத்துக்களை பதிவிட ஆரம்பித்தனர். மேலும் சுதிபாவுக்கு ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் வங்காள அமைச்சர் பாபுல் சுப்ரியோவுடன் நெருங்கிய தொடர்பு இருக்கலாம் என பலர் கருத்துகள் தெரிவித்து வந்தனர்.இந்த விவகாரம் தொடர்பாக விளக்கம் அளித்த சுதிபா சாட்டர்ஜி,

பிரிட்ஜில் இருந்த மாட்டிறைச்சி; 11 வீடுகள் இடித்து தரைமட்டம் - அதிர்ச்சி சம்பவம்!

பிரிட்ஜில் இருந்த மாட்டிறைச்சி; 11 வீடுகள் இடித்து தரைமட்டம் - அதிர்ச்சி சம்பவம்!

மிரட்டிய பாஜகவினர்

"என்னை ட்ரோல் செய்யும் பெரும்பாலானோர் அந்த வீடியோவை பார்க்கவில்லை என்று நான் நம்புகிறேன். நான் ஒருபோதும் மாட்டிறைச்சி சாப்பிட்டதில்லை. மாட்டிறைச்சியை நான் தொட்டது கூட இல்லை. கரீம் ஜஹான் (நிகழ்ச்சியில் பங்கேற்றவர்) சமையல் செய்த வீடியோக்கள் இன்னும் எடிட் செய்யப்படவில்லை.

சமையல் நிகழ்ச்சியில் மாட்டிறைச்சி; உயிருடன் எரித்துவிடுவோம்..நடிகையை மிரட்டிய பாஜகவினர்! | Death Threats Becuase Beef On Cooking Show

மாட்டுக்கறி வங்காளதேசத்தில் தேசிய உணவுகளில் ஒன்றாகும். அதனால், நான் மற்ற மதத்தை புண்படுத்த விரும்பவில்லை. இந்த வீடியோக்களை வைத்து மம்தா பானர்ஜி மற்றும் பாபுல் சுப்ரியோவை பலர் விமர்சித்து வருகின்றனர்.

திரிணாமுல் காங்கிரஸ் கட்சி மட்டுமில்ல எந்த அரசியல் கட்சிக்கும் எனக்கும் எந்த தொடர்பும் இல்லை பாஜகவின் பெயரிலும் பல மிரட்டல் செய்திகள் வருகின்றன. என்னை உயிருடன் எரித்துவிடுவோம் அல்லது என் மகனைக் கடத்துவோம் என்று வெளிப்படையாக மிரட்டல் விடுக்கப்படுகிறது" என்று அவர் விளக்கமளித்துள்ளார்.