வயதான தாய் என்றுக்கூட பாராமல்..மகனே செய்த கொடூரம் - இறுதியில் நேர்ந்த சம்பவம்!
தாயை மகன் பாலியல் வன்கொடுமை செய்த கொடூரம் அரங்கேறியுள்ளது.
பாலியல் வன்கொடுமை
உத்தரப் பிரதேச மாநிலம் புலந்த்ஷாஹர் மாவட்டத்தில், கடந்த 2023 ஆம் ஆண்டு ஜனவரி 16 அன்று 48 வயதான மகனே தாயை பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அம்மாநிலத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியிருந்தது.
அதாவது, 48 வயது நிரம்பிய நபர் ஒருவர் தனது மனைவி இறந்த பிறகு தாயை மனைவியாக இருக்க சொல்லி தொடர்ந்து வலியுறுத்தி வந்துள்ளார். இந்த நிலையில், சம்பவத்தன்று வயதான தாயை தோட்டத்துக்குள் தூக்கிச் சென்று அந்த மகன் பாலியல் வன்கொடுமை செய்துள்ளான்.
மகன் - தாய்
அதன் பிறகு, தப்பி ஓடிய அந்த நபரை அவருடன் உடன் பிறந்தவர்கள் வலை வீசி தேடிப் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். இதையடுத்து, பாதிக்கப்பட்ட தாய் போலீசாரிடம் தந்த வாக்குமூலத்தை அடுத்து இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு
மாவட்ட நீதிமன்றத்தில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வந்தது. இந்த சூழலில், நேற்றைய தினம் நடந்த இறுதி விசாரணையில் குற்றம் உறுதி செய்யப்பட்டு அந்த நபருக்கு ஆயுள் விதிக்கப்பட்டுள்ளது. மேலும் ரூ.51,000 அபராதமும் விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.