இந்திய கடற்படை வீரர்கள் 8 பேருக்கு மரண தண்டனை குறைப்பு - மத்திய அரசின் அடுத்த மூவ்!
இந்தியர்களின் மரண தண்டனை காலம் குறைக்கப்பட்டுள்ளது.
மரண தண்டனை
கத்தாரில் உள்ள தஹ்ரா குளோபல் டெக்னாலஜிஸ் மற்றும் கன்சல்டன்சி சர்வீசஸ் என்ற நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த எட்டு இந்தியர்கள், உளவு பார்த்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்டனர்.
தொடர்ந்து கடந்த ஆண்டு அவர்கள் கைது செய்யப்பட்டு மரண தண்டனை வழங்கப்பட்டது. கைது செய்யப்பட்ட அனைவரும் இந்தியக் கடற்படையின் முன்னாள் வீரர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
மத்திய அரசு நடவடிக்கை
அதனையடுத்து தீர்ப்பை ஏற்காத இந்திய அரசு மேல்முறையீடு செய்தது. அதனை விரைவில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என கத்தார் நீதிமன்றம் தெரிவித்திருந்தது. அதன்பின், மரண தண்டனையைச் சிறைத் தண்டனையாகக் குறைத்தது.
விரிவான தீர்ப்பு இன்னும் வெளியாகவில்லை. இருப்பினும், அடுத்து தேவையான நடவடிக்கைகளை எடுக்கத் தயாராக உள்ளதாக வெளியுறவுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
அடுத்ததாக, இந்தியாவிற்கும் கத்தாருக்கும் இடையே குற்றவாளிகளை மாற்றிக் கொள்ளும் ஒப்பந்தம் இருக்கும் நிலையில், அதன் மூலம் அந்த 8 முன்னாள் கடற்படை அதிகாரிகளை இந்தியாவிற்கு அழைத்து வர இந்தியா திட்டமிட்டுள்ளது. அவர்கள் எஞ்சிய சிறை காலத்தை இந்தியச் சிறைகளில் அனுபவிப்பார்கள்.