சினிமா பாணியில் கடலில் வீசப்பட்ட தங்க கட்டிகள் : ஸ்கூபா வீரர்கள் உதவியோடு தங்கத்தை மீட்ட கடற்படை

By Irumporai Feb 09, 2023 08:59 AM GMT
Report

ராமேஸ்வரம் கடலில் வீசப்பட்ட தங்கத்தில் 12 கிலோ தங்கம் மீட்கப்பட்டது.

கடலில் வீசப்பட்ட தங்க கட்டிகள்

நேற்று காலை இலங்கையில் இருந்து கடத்தல் தங்கம் கடத்தி வரப்பட உள்ளதாக இந்திய கடலோர காவல் படைக்கும், மத்திய வருவாய் புலனாய்வுத்துறைக்கும் தகவல் கிடைத்துள்ளது.

இதனை அடுத்து நேற்று அதிகாலை 5 மணி முதல் அதிகாரிகள் மன்னர் வளைகுடா பகுதியில் கூட்டு ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர்.

சினிமா பாணியில் கடலில் வீசப்பட்ட தங்க கட்டிகள் : ஸ்கூபா வீரர்கள் உதவியோடு தங்கத்தை மீட்ட கடற்படை | Gold Bars Thrown In Rameswara Sea

அப்போது சந்தேகத்துக்கு இடமாக கருதப்பட்ட கடல் ராஜா என்ற நாட்டுப் படகை சோதனை செய்வதற்கு அதிகாரிகள் முற்படுவதற்கு முன்பதாகவே அந்தப் படகில் ஒரு பார்சலை கடலில் தூக்கி வீசி உள்ளனர்.  

காவல்துறை விசாரணை

இதனையடுத்து காவல் படையினர் படகை சுற்றி வளைத்து நாட்டுப் படகை பறிமுதல் செய்தனர். மேலும் படகில் இருந்த இரண்டு பேரிடம் கடலோர காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதனையடுத்து கடலில் வீசப்பட்ட தங்கத்தை தேடும் பணியில் 2 நாட்களாக ஈடுபட்டு வந்தனர்.

 ராமேஸ்வரம் அருகே உள்ள மண்டபம் கடலில் கடத்தல் காரர்கள் வீசிய பல கோடி ரூபாய் மதிப்புள்ள தங்க கட்டிகளை ஸ்கூபா டைவிங் வீரர்கள் உதவியுடன் இந்திய கடற்படை அதிகாரிகள் தேடி வந்த நிலையில், கடலில் வீசப்பட்ட 12 கிலோ கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அதன் மதிப்பு 7.5 கோடி என தெரியவந்துள்ளது