நடனமாடிக்கொண்டிருந்த போது திடீரென கீழே சரிந்து உயிரிழந்த தெருக்கூத்து கலைஞர் - வைரலாகும் வீடியோ
Viral Video
By Nandhini
சமூகவலைத்தளங்களில் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவில், ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம், குப்பந்துறை கிராமத்தை சார்ந்த தெருக்கூத்து கலைஞர் ராஜய்யன், இரணியன் கூத்து நாடகம் நடித்துக் கொண்டிருக்கும் போதே திடீரென கீழே சரிந்து உயிரிழந்தார். இவர் கீழே சரிந்து உயிரிழந்ததைப் பார்த்து அங்கிருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
இது குறித்த வீடியோ சமூகவலைத்தளங்களில் தற்போது வைரலாகி வருகிறது. இந்த வீடியோவைப் பார்த்த நெட்டிசன்கள் அவருக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.