இயக்குநர் தாய் செல்வம் மறைவு: இதனால் தான் இரங்கல் தெரிவிக்கவில்லை - கேப்ரியல்லா
இயக்குநர் தாய் செல்வம் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்காதது குறித்து நடிகை கேப்ரியல்லா விளக்கமளித்துள்ளார்.
இயக்குநர் மறைவு
பிரபல தொலைக்காட்சியான விஜய் டிவியில் ‘மெளனராகம்’, ‘நாம் இருவர் நமக்கு இருவர்’, ‘ஈரமான ரோஜாவே 2’ உள்ளிட்ட சீரியல்களை இயக்கிய இயக்குநர் தாய் செல்வம் காலமானார். இவரது மறைவுக்கு பிரபலங்களும், ரசிகர்களும் தங்களது இரங்கலைத் தெரிவித்தனர்.
இந்நிலையில், ஈரமான ரோஜாவே2’ சீரியலின் நாயகியான கேப்ரியல்லா இரங்கல் தெரிவிக்காதது குறித்து ரசிகர்கள் கேள்விகள் எழுப்பிய வண்ணம் இருந்தனர். அதற்கு அவர், " நான் இயக்குநர் தாய் செல்வம் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்காதது ஏன் என்பது நிறைய பேருக்கு பிரச்சினையாக இருக்கிறது.
கேப்ரியல்லா விளக்கம்
நான் அந்த சமயத்தில் ஊரில் இல்லை. அதனால், அந்த சமயத்தில் நான் அவரைப் பற்றி நான் சமூக வலைதளங்களில் பகிர்ந்து கொள்வது சரியாகத் தோன்றவில்லை. தனிப்பட்ட முறையில் என்னுடைய இரங்கலை நிச்சயம் தெரிவிப்பேன்.
அதை சமூகவலைதளங்களில் பொதுவாக பகிர்ந்தால்தான் நான் அக்கறைக் கொண்டுள்ளேன் என்பது அர்த்தமல்ல. இது மிகவும் சென்சிடிவான விஷயம் என்பதால் இதைப் பற்றி நான் அதிகம் பேச விரும்பவில்லை. நிச்சயம் இது உங்களைப் போலவே, எங்களுக்கும் அதிக வருத்தமான செய்திதான்.
அவருடைய இழப்பு எங்களுக்கு மிகப் பெரிய நஷ்டம். எங்கள் மனநிலையை புரிந்து கொள்ளுங்கள்" என விளக்கம் தெரிவித்துள்ளார்.