எனக்கும், கேப்ரியல்லாவுக்கும் அந்த உறவுதான் இருக்கிறது - முதல்முறையாக உண்மையை உடைத்த ஆஜித்...!
நானும், நடிகை கேப்ரியல்லா அந்த உறவு முறையில்தான் பழகி வருகிறோம் என்று ஆஜித் முதல்முறையாக உண்மையை உடைத்து பேசியுள்ளார்.
நடிகை கேப்ரியல்லா
குழந்தை நட்சத்திரமாக விஜய் டிவி சீரியலான 7 சி சீரியலில் அறிமுகமானவர்தான் நடிகை கேப்ரியல்லா.
இதனையடுத்து, தனுஷ், ஸ்ருதிஹாசன் நடிப்பில் வெளியான ‘3’ என்ற படத்தில் ஸ்ருதிஹாசனுக்கு தங்கையாக நடித்தார். இதன் பிறகு, நடிகை ராதிகாவுக்கு மகளாக ‘சென்னையில் ஒருநாள்’, நடிகர் ‘சமுத்திரக்கனி’ நடித்த ‘அப்பா’ ஆகிய படங்களில் கேப்ரியல்லா நடித்துள்ளார்.
இவர், பிக் பாஸ் சீசன் 4ல் போட்டியாளர்களில் ஒருவராக கலந்து கொண்டார். இந்நிகழ்ச்சியில் கடைசி வரை நின்று விளையாடிய கேப்ரியல்லா, பிக்பாஸ் கொடுத்த 5 லட்ச ரூபாயை எடுத்து கொண்டு வெளியேறினார்.
தற்போது, சீரியலில் ஹீரோயினாக நடித்து வருகிறார். பிக் பாஸ் சீசன் 4 சீசனில் கலந்து கொண்ட இவருக்கும், ஆஜித்துக்கும்,பிக் பாஸ் வீட்டிற்குள் இருந்தபோது காதலர்கள் என்று கிசுகிசுக்கப்பட்டனர்.
இந்த நட்பு அவர்கள் வெளியே வந்த பிறகும் கூட தொடர்ந்து வருகிறது. இருவரும் ஒன்றாக இணைந்து பிக்பாஸ் ஜோடி நிகழ்ச்சியிலும் நடனமும் ஆடினர். இருவரும், அவ்வப்போது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், டான்ஸ் ஆடி வீடியோக்களையும் வெளியிட்டு வருகின்றனர். இவர்கள் இருவரும் காதலித்து வருவதாக வதந்திகள் சமூகவலைத்தளங்களில் உலவி வந்தது.
உண்மையை உடைத்த ஆஜித்
இந்நிலையில், ஒரு சேனனில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட ஆஜித்திடம், கேப்ரியல்லா உடனான காதல் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.
அப்போது, அதற்கு பதில் அளித்த ஆஜித், நாங்கள் இருவரும் அது போல் பழகியதே கிடையாது. அண்ணன் - தங்கை உறவு முறையில் தான் பழகி வருகிறோம் என்று உண்மையை உடைத்துள்ளார்.