மனிதர்களை கொல்லக் கூடிய வைரஸ்; ஆய்வில் சீனா - என்ன திட்டம்?
மனிதர்களை கொல்ல கூடிய வைரஸை வைத்து சீனா ஆய்வில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது.
கொடிய வைரஸ்
கொரோனா பாதிப்பு உலகம் முழுவதும் பரவி 3 ஆண்டுகளாக நாடுகளை உலுக்கியது. தற்போது, இந்தியா உள்பட பல நாடுகளில் கொரோனாவின் ஜே.என். வகை வைரஸ் அதிகரித்து வருகிறது.
இந்நிலையில், மனிதர்களை கொல்ல கூடிய வைரஸை வைத்து சீனா ஆய்வில் ஈடுபட்டுள்ளது. சீன ராணுவத்திடம் இருந்து பயிற்சி பெற்ற டாக்டர்கள் இந்த ஆய்வில் ஈடுபட்டுள்ளனர். இந்த வைரஸை எலிகள் சிலவற்றுக்கு கொடுத்து பரிசோதித்துள்ளனர்.
சீனா ஆய்வு
எலிகளில் முதல் 3 நாட்களில் பாதிப்பு குறைவாக காணப்பட்டபோதும், அடுத்த 3 நாட்களில் பல முக்கிய உறுப்புகளில் தொற்று பரவி பாதிப்பு உண்டாக்கி உயிரிழப்பை ஏற்படுத்தியுள்ளது. இது மேலும், மனிதர்களிலும் 100% தீவிர தொற்றும் மற்றும் பாதிப்பு ஏற்படுத்தி உயிரிழப்புகளை ஏற்படுத்த கூடிய திறன் படைத்தது என தெரிய வந்துள்ளது.
இந்நிலையில், நடப்பு ஜனவரியில் ஜே.என்.-1 வகை கொரோனா வைரசால் கொரோனா பாதிப்பு அதிகரிக்க கூடும் என சீன ஆய்வாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
முன்னதாக, சீனாவின் உகான் நகரில் ஆய்வகத்தில் வைத்து கொரோனா வைரசானது உற்பத்தி செய்யப்பட்டது என உலக நாடுகள் குற்றச்சாட்டு தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.