கொரோனா வந்தது இப்படித்தான் .. அடித்துச் சொல்லும் அமெரிக்கா : அதிர்ச்சியில் உலக நாடுகள்
கொரோனா வைரஸ் 2019 ஆண்டின் இறுதியில் உலகம் முழுவதும் பரவி பல உயிர்களை பலி வாங்கியது கொரோனா , இந்த கொரோனா வைரஸ் முதலில் சீனாவில் தோன்றியதாகவும் வுஹான் உயிரியல் ஆராய்சி நிறுவனத்தில் தான் முதலில் கொரோனா தோன்றியதாக அமெரிக்கா தொடர்ச்சியாக குற்றம் சாற்றி வருகின்றது.
கொரோனா சர்ச்சை
ஆனால் இதற்கு சீனா தனது கண்டனங்களையும் மறுப்பினையும் தெரிவித்து வருகின்றது. இந்த நிலையில் அமெரிக்காவின் தலை சிறந்த புலானாய்வு அமைப்பின் எஃப்.பி.ஐ. தெரிவித்துள்ளது. எஃப்.பி.ஐ. இயக்குநர் கிரிஸ்டோபர் ரே தனியார் தொலைகாட்சி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் கொரோனா பரவலுக்கு சீனா தான் காரணம் என்று தெரிவித்துள்ளார்.
கொரோனா தொற்று ஆரம்ப காலத்தில் உருவானதை உலக நாடுகள் கண்டுபிடிக்கும் முயற்சிகளை எடுத்தும் வரும் நிலையில், அவற்றை தடுக்கவும், குழப்பம் ஏற்படுத்தவும் சீனா முயற்சி மேற்கொண்டு வருவதாக எஃப்.பி.ஐ. இயக்குநர் கிரிஸ்டோபர் ரே கூறியுள்ளார்.
சீனாவின் மீது குற்றச்சாட்டு
இதே போல் அமெரிக்காவின் மின் சக்தி அமைப்பு வெளியிட்ட அறிக்கையில் சீனாவின் வுகான் ஆய்வகத்தில் ஏற்பட்ட கசிவினால் உருவானதே கொரோனா வைரஸ் என்று கூறியுள்ளது.
கொரோனா குறித்த தகவல்கள் கடந்த சில மாதங்களாக அமைதியாக இருந்த நிலையில் தற்போது அமெரிக்காவை சேர்ந்த பல புலானாய்வு அமைப்புகள் வெளிப்படையாகவே சீனாவின் மீது குற்றச்சாட்டுகளை முன் வைத்து வருவது , கொரோனா தோற்றம் குறித்த சர்சையினை மீண்டும் கிளப்பியுள்ளது.