திடீர் மாரடைப்பு; செத்து..செத்து..பிழைத்த நபர் - குழம்பி போன உறவினர்கள்!
மாரடைபால் இறந்து போனவர் திடீரென உயிரோடு எழுந்த சிறிது நேரத்தில் உயிரிழந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மீண்டும் பிழைத்து இறப்பு
கர்நாடகா மாநிலம், ராமநகரா மாவட்டத்தில் உள்ள ஹுச்சையன்தொட்டியை என்னும் கிராமத்தை சேர்ந்தவர் சிவராமு(55). கூலித் தொழிலாளியான இவருக்கு திடீரென நேற்று காலை மயங்கி விழுந்தார். இதனால் பதறிப்போன குடும்பத்தினர், உடனடியாக அவரை மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.
அங்கு அவருக்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் சிவராமு மாரடைப்பால் உயிர் பிரிந்துவிட்டதாக கூறினார். இதனையடுத்து, சிவராமு உடலை தகனம் செய்ய அவரது உறவினர்கள் ஏற்பாடு செய்தனர். அப்போது அவரை கொண்டு சென்ற போது திடீரென சிவராமு எழுந்தது அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது.
ஷாக் சம்பவம்
இந்த சம்பவம் அவரது குடும்பத்தினரையும், உறவினர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இந்த தகவலறிந்து அங்கு வந்த மருத்துவர்கள் அவரை சோதித்து பார்க்கையில் மீண்டும் மாரடைப்பு ஏற்பட்டுள்ளதால் அவரை உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.ஆனால், போகும் வழியிலேயே சிவராமு உயிர் பிரிந்தது.
இதனால் அவரது உறவினர்கள், சிவராமுவின் உடலை திரும்ப தகனம் செய்ய கொண்டு வந்தனர். குழப்பமடைந்த உறவினர்கள் அவர் மறுபடியும் உயிருடன் வருவார் என்ற நம்பிக்கையில் அவரது வீட்டில் நீண்ட நேரம் சிவராமுவின் உடலை வைத்திருந்தனர்.