இறந்த நபரிடம் இருந்து வந்த மர்ம email..இன்று வரை அறியப்படாத விடை - பின்னணி என்ன?

United States of America
By Swetha Apr 10, 2024 12:44 PM GMT
Report

இறந்தவரிடமிருந்து நண்பர்களுக்கு இமெயில் வந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 மர்ம email

இந்த காலகட்டத்தின் தொழில்நுட்ப வளர்ச்சியில் நமக்கு தேவைப்படும் நேரத்திற்கு அனுப்புவது என்பது சாத்தியம் தான். ஆனால், அதுவே 2012 ஆம் ஆண்டு இறந்தவரிடம் இருந்து இமெயில் வருகிறது என்றால் அது ஒரு அதிர்ச்சிகரமானதாக இருக்கும்.

இறந்த நபரிடம் இருந்து வந்த மர்ம email..இன்று வரை அறியப்படாத விடை - பின்னணி என்ன? | Dead Man Sent Email To His Friends Unsolved

அப்படி ஒரு நிகழ்வு அமெரிக்காவில் நடந்துள்ளது. கடந்த 2012 ஆம் ஆண்டு அமெரிக்காவில் உள்ள பென்சில்வேனியா மாகாணத்தை சேர்ந்த ஜாக் ஃப்ரோஸ்(32) இதய நோய் காரணமாக உயிரிழந்தார். அவர் இறந்த சில மாதங்களில் இவருடைய நண்பர்களுக்கு இவரின் இமெயில் ஐடி-யில் இருந்து இமெயில் வந்துள்ளது.

அதில் அவர் சாதாரணமாக நண்பர்களிடம் பேசுவது போன்று இருந்ததை பார்த்த இரண்டு நண்பர்கள் கதிக்கலங்கினர். இறந்த ஜாக்குடன் 17 வருடங்களாக நண்பனாக இருந்த டிம் ஹார்ட் என்றவருக்கு முதலில் வந்த இமெயிலில், “நான் உன்னை பார்த்துக்கொண்டு இருக்கிறேன்” என்ற தலைப்புடன், நான் பேசுவது கேட்கிறதா? நான் உன்னுடைய வீட்டில் தான் இருக்கிறேன். மேல் அறையை சுத்தம் செய்”என இருந்ததை பார்த்து வியந்துள்ளார்.

கோவையில் வெடிகுண்டு மிரட்டல்; பரபரப்பை ஏற்படுத்திய இமெயில் - காவல் ஆணையர் விளக்கம்!

கோவையில் வெடிகுண்டு மிரட்டல்; பரபரப்பை ஏற்படுத்திய இமெயில் - காவல் ஆணையர் விளக்கம்!

பின்னணி என்ன?

ஜாக் இறப்புக்கு முன் ருவரும் மேல் மாடியில் அமர்ந்துகொண்டு அறையில் இருக்கும் தூசிகள் குறித்து பேசிக்கொண்டு இருந்தது அவருக்கு நினைவிற்கு வந்துள்ளது. இதே மாதிரி, ஜாக்கின் உறவினர் ஜிம்மி மெக்ராவிற்கு எச்சரிக்கும் விதத்தில் இமெயில் வந்துள்ளது.

இறந்த நபரிடம் இருந்து வந்த மர்ம email..இன்று வரை அறியப்படாத விடை - பின்னணி என்ன? | Dead Man Sent Email To His Friends Unsolved

அதில், “நீ எப்படி இருக்கிறாய்? உனக்கு அடிப்படப்போகிறது என எனக்கு தெரியும். நான் உன்னை எச்சரிக்க முயற்சி செய்தேன், பாதுகாப்பாக இரு என்று இருந்தது. இதன்பிறகு ஜிம்மிக்கு காலில் அடிப்பட்டது என்பது குறிப்படத்தக்கது. இந்த இமெயில் ஐடியை யாரும் உபயோமிக்க சாத்தியமில்லை என்று அவரின் நண்பர்கள் தெரிவித்திருக்கின்றனர்.

ஆனால் எப்படி இறந்தவரிடம் இருந்து இமெயில் வந்தது என்பது இதுவரை கண்டறியபடாத மர்மமாகவே இருந்து வருகிறது. அவரது குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் ஜான், தொழில்நுட்பம் மூலம் தங்களிடம் பேசினார் என்பதை நம்புகின்றனர்.

இறந்த நபரிடம் இருந்து வந்த மர்ம email..இன்று வரை அறியப்படாத விடை - பின்னணி என்ன? | Dead Man Sent Email To His Friends Unsolved

அதே நேரம் இறந்தவருக்கு தெரிந்த நண்பர்கள் யாரேனும் விளையாட்டாக கூட செய்திருக்கலாம் என்றும் பலரும் மறுக்கின்றனர். இருப்பினும் இத்தனை ஆண்டு காலம் விடைக்கண்டறிய முடியாத புதிராகவே இந்த நிகழ்வு இருக்கிறது.